பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 267

மறையவர், அவை வினரைப் பார்த்து உங்களில் ஒரு

வரும் இதுவரை என்னே அறிந்துகொள்ளாதிருப்பீரா ல்ை என்னுடன் வம்மின் என்று சொல்லி, நம்பியச

ரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து

வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்

டுறை” என்னும் திருக்கோயிலிற் புகுந்து மறைந்தார்.

பின் சென்ருேர் யாவரும் அவரைக் காணுது திகைத்து

நின் ருர்கள்.

உடன் சென்ற நம்பியாரூரர், ‘என் னே அடிமை கொண்ட மறையோர் இறைவரது திருக்கோயிலிற் புகுந்து மறைந்தது என் கொலோ’ என வியப்புற்றுத் தனியே தொடர்ந்து சென்று பெருவிருப்பத்துடன் அவரைக் கூவியழைத்தார். அப்பொழுது மறையவ ராய் வந்து தடுத்தாண்டருளிய சிவபெருமான், உமை யம்மையாருடன் விடைமீது விசும்பில் தோன்றி நம்பி யாரூரர்க்குக்காட்சி தந்தருளினர். நம்பியாரூானே நீ முன்னமே நமக்குரிய தொண்டன். நின் மனத்தே மாத ரொடு வாழும் காதல்வேட்கை தோன்றினமையால் பின்பு நம்முடைய ஏவலால் இம் மண்ணின் மீது பிறந் தனே. துன்புறுதற்குக் காரணமாகிய இவ்வுலகியல் வாழ்வு நின்னே த் தொடர்ந்து வருத்தாத வண்ணம் நல்லறிவுடைய அவையோராகிய அந்தணர்களின் முன்னிலையிலே நாமே வந்து நின்னே த் தடுத்து ஆட் கொண்டோம் எனத் திருவாய் மலர்ந்தருளினர்.

இத் திருவருள் வாக்கினேக் கேட்ட நாவலு ரர், தாய்ப்ப சுவின் கனைப்பினேக் கேட்டுக் கதறும் கன்றி னைப் போன்று அன்பினுற் கதறி, மெய்ம்மயிர் சிலிர்க் கக் கைகளேத் தலைமேற் குவித்து இறைஞ்சினர். "மறையவகை வந்து என்னே வலிய ஆட்கொண்ட இது, தில்லேயம்பலத்துள் ஆடும் பெரும கிைய நுமது அருடசெயலோ என நெஞ்சம் நெக்குருகிப் போற்றி