பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

பன்னிரு திருமுறை வரலாறு


மன்றுள் நின் ருடும் தமது திருக்கோலத்தோடு காட்சி கொடுத்தருளினர். அவ்வழகிய காட்சியைக்கண்டு அளவிலாப் பேரின்பமடைந்த சுந்தரர். தில்லேயம் பலவன் திருக்கூத்தினைக் கண்டு கும்பிடப்பெற்ருல் இனிப் புறம்போய் எய்து தற்கு யாதுளது? என்னும் பெருமகிழ்ச்சியுடை யராய்ப் பேரூரினின்றும் புறப்பட் டுத் தில்லேயை நோக்கிச் செல்வரா யினர் கொங்கு தாட்டுத் திருப்ப தியுளொன் ருகிய வெஞ்சமாக்கூடலே விறைஞ்சிப்போற்றிச் சோழநாட்டையடைந்துகற்குடி, ஆறைமேற்றளி. இன்னம்பர், புறம்பயம் முதலிய திருத் த லங்களே யிறைஞ்சி நடுநாட்டில் திருக்கூடலே யாற் று ரை யணுகியவர், அங்குச் செல்லாமல் திருமுது. குன்றை நோக்கிச் சென் ருர் . அப்பொழுது கூடலே யாற்றுாரிற் கோயில் கொண்டருளிய சிவபெருமான் , மறையவர் வடிவுகொண்டு வழிப்போக்கராய் வன் ருெண்டரையனுகி நின்றர். அந்தணுளரைக் கண்ட சுந்தரர், அவரைப் பணிந்து ஐயரே, யாம் இன்று திரு முதுகுன்றுக்குப் போதற்குரிய வழியினேத் தெரிவித் தல் வேண்டும்’ என வேண்டிக்கொண்டார். அது கேட்ட இறைவர், கூடலே யாற்றுாசை யடையச் சென்றது இவ்வழியே எனக்கூறி அவர்க்குத் துணை பாய்த் தாமும் அவ்வூரெல்லேயளவும் உடன் போந்து பின் மறைந்தருளினர். உடன்வந்த அந்தணரைக் காணுத சுந்தரர், அழைத்துவந்து மறைந்த அவர் சிவபெருமானே யெனத் தெளிந்து,

மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப் سة ثقته فيه وانه பொடியணி திருமேனிப் புரிகுழ லுமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலே யாற்றுாரில் அடிகளில் வழிபோந்த அதிசய மறியேனே. என்னும் திருப்பதிகத்தைப்பாடிக் கூடலேயாற்றுார்க் கோயிலேயடைந்து தமக்கு வழித்துணையாய் வந்த பெருமான வணங்கிப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைந்தார்.