பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

பன்னிரு திருமுறை வரலாறு


இருந்திருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது அந் நிலையில் அவர்க்கு அறுபது வயதிற்கு மேற்பட்டிருத்தல் வேண்டுமென்பர் தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை சீநிவாசபிள்ளே யவர்கள். மகேந்திர வர்மன் ஆட்சி கி. பி. 600 முதல் 680 வரை யென்று தெரிதலால் மகேந்திரன் பட்டத்தை யேற்ற காலத்தில் திரு நாவுக் கரசர் தருமசேனர் என்ற பெயருடன் சமண சமயத் தில் சார்ந்திருந்தாரென்றும் அவருக்கு அப்பொழுது ஏறக்குறைய முப்பது வயது நடந்ததென்றும் கொள்ள லாம். அங்ங்னம் கொள்ளுங்கால் சமணஞ் சார் தற்கு முன் மருணிக்கியார் என்ற இயற்பெயரோடு விளங்கிய அவர் கி. பி. 575-ம் ஆண்டிலோ அ த ற் கு ஒன்றிரண்டாண்டுகள் முன்னே பின்னே திருவவ தாரஞ் செய்தருளினரெனக் கொள்ளுதல் பொருத்த முடையதாகும். இறைவனருளால் சூலேநோய் திரப் பெற்று திருநாவுக்கரசு என அழைக்கப்பட்ட இப் பெருந்தகையார், தில்லேயம்பலவாணனே வழிபட்டுப் போற்றும் நிலையில், சீகாழியில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் என்னும் இளங்குழந்தை மூவாண்டிலே உமையம்மையாரளித்த ஞானப்பாலேப் பருகித் திரு நெறிய தமிழ் பாடிய வியப்புடைய நிகழ்ச்சியை அடியார்கள் சொல்லக் கேட்டார். உடனே தில் லேப் பெருமான் பால் விடைபெற்றுத் திருஞானசம்பந்தப் பிள்ளேயாரைக் காணவேண்டுமென்னும் பெருவிருப்பத் தால் சீகாழிப்பதிக்குச் சென் ருர், அக்காலத்தில் திருநாவுக்கரசரது திருமேனி நிலையினேக் கூறப்போந்த சேக்கிழார்,

சிந்தையிடை யருவன்பும் திருமேனி தனிலசைவும் கந்தைமிக யாங்கருத்தும் கையுழவாரப் படையும் வந்திழிகண் ணிர்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிர் வந்தணேய. என்ற பாடலால் அவரது உடம்பின் முதுமைத் தளர்ச்சி யைத் தெளிவாகக் கூறுகின் ருர். திருநாவுக்கரசர்