பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

பன்னிரு திருமுறை வரலாறு


மாவதுநீறு என்னும் திருநீற்றுப் பதிகமும், திருமயிலாப் பூரில் எலும்பைப் பெண்ணுக்கிய மட்டிட்ட புன்னேயங் கானல்’ என்னும் பூம்பாவைத் திருப்பதிகமும் இவ் விரண்டாந் திருமுறையில் அமைந்த அற்புதத் திருப் பதிகங்களாகும்.

செந்நெலங்கழனிப் பழனத்தயலே செழும் புன்னே வெண்கிழியிற் பவளம்புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழலீர் சொலீர் பின்னு செஞ்சடையிற் பிறைபாம்புடன் வைத்ததே.

என உலக மக்களுக்குரிய செந்நெல் உணவினையும் நறுமலரினையும் குறிப்பிட்டு இறைவன் திருவருட் குறிப் பறிந்து உயிர்கள் தம்முட் பகையின்றி வாழவேண்டிய நுட்பத்தினையும் அறிவுறுத்தும் திருப்பாடலே முதலாகக் கொண்டு தொடங்கிய இரண்டா ந் திருமுறை,

எய்தவொண்ணு இறைவன் உறைகின்ற புகலியைக் கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன் சீர் செய்தபத்தும் இவை செப்பவல்லார் சிவலோகத்தில் எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே.

என நிறைவுபெற்றிருத்தலே நுணுகி நோக்குங்கால், இறைவனது திருவருள்வழி நின்று எவ்வுயிர்க்கும் அன்பாயொழுகும் மெய்யடியார்கள் “வையத்து வாழ்வாங்குவாழ்பவன் வானுறையும், தெய்வத்துள் வைக்கப்படும்” என்னும் தமிழ்மறைக்கு இலக்கியமாகச் சிவலோகத்தில் எய்தி இமையோர்கள் போற்ற இன் புற்றிருப்பார்கள் எண் இறைவன் வழிபாட்டினலெய்தும் இருமைப்பயன்களையும் அறிவுறுத்தும் முறையில் இத் திருமுறை அமைந்திருத்தல் இனிது புலணுகும்.

மூன்ருந் திருமுறையில் கா ந் த | ர ப ஞ் ச ம ம் , கொல்லி, கொல்லிக் கெளவான ம், கெளசிகம், பஞ்சமம், சாதாரி, பழம் பஞ்சுரம், புற நீர்மை, அந்தாளிக் குறிஞ்சி