பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 489

கொல்லிக் கெள வாண மாகிய பதிகம் தனியே ஒரு கட்டளே பெறுமெனக் குறிப்பிடாமையால், இக்கெள வானப் பதிக த்தையும் கொல்லிப்பண்ணின் கட்டளை யாகக் கொண்டு 24 முதல் 36 வரையுள்ள பதிகங்கள் கொல்லியின் முதற் கட்டளே, 37 முதல் 39 வரையுள் ளவை இரண்டாங் கட்டளே, 40, 41-ஆம் பதிகங்கள் மூன் ருங் கட்டளே, கொல்லிக் கெளவானப் பதிகம் நான் காங் கட்டளே எனக் கருது தற்கும் இடமுண்டு. எனினும் கொல்லி என்பது, மருதப் பெரும்பண்ணின் நவிர்' என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 70 என்ற எண்பெற்றும், கெளவாணம் என்பது குறிஞ்சிப் பெரும பண் ணின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 49 என்ற எண் பெற்றும் நின்ற இருவேறு பண்களாதலா னும், இவ்விரு பண்களேயும் ஒன்றெனக் கொள்ளின் பண்களின் தொகை நூற்றிரண்டு எனப்பட்டுப் பண் கள் நூற்று மூன்று என்னும் பழங்கொள்கை வழுப்படு மாதலானும் கொல்லியும், கொல்லிக்கெளவாணமும் இரு வேறுபண்கள் எனக்கொண்டு கட்டளே வகுப்பதே ஏற்புடையதென்பது யாழ் நூலாசிரியர் துணிபாகும்.'

43 முதல் 54 வரையுள்ள பதிகங்கள் கெளசிகப் பண்ணுக்கு உரியன. கவுசிகத்துக் கூறும் வகை சொல்லி லிரண்டாக்கி" எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்கள் இரண்டு கட்டளை பெறும் என அறிகின்ருேம்.

கெளசிகம்

கட்டளை 1.

சந்த மார் முலே யாடன கூறனர்

தான தானன தா னன தானளு. எனவரும். 48 முதல் 51 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. மேற்குறித்த கட்டளையடியின் இரண்டாஞ்

1. யாழ் நூல் பக்கம் 248.