பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

பன்னிரு திருமுறை வரலாறு


கேட்டு விரைவாக எழுதும் நிலையில் பெயரொப்புமை யால் அது பழந்தக்க ராகம் என எழுதப்பட்டுப் பின் அப்பதிகம் தக்கராகப் பண்ணுடன் இணேந்து முதற் றிரு முறையில் முறை மாறிக் கோக்கப் பெற்றிருத்தல் வேண் டும் எனவும், இவ்வாறு பழம்பஞ் சுரப் பதிகங்கன் முறை மாறிக் கோக்கப்பெற்ற நிலேயில் மூன் ருந்திரு முறை யிலமைந்த பழம்பஞ் சுரப் பதிகங்களின் கட்டளே விகற் பம் திருமுறை கண்ட புராணத்தில் இடம் பெருது விடு பட்டிருத்தல் வேண்டும் எனவும் கருதவேண்டியுளது. இனி, பழம்பஞ்சுரப் பதிகங்களின் கட்டளை வகையினைக் காண்போம்.

பழம்பஞ்சுரம்

யாப்பு !

கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி தனதன தானன தான தான தானன தானதன. அனவரும். தனதன. தானன ஆதலும், தான’ தன னு ஆதலும், ஈற்றிலுள்ள தானன தான தன’ என வரும் இரு சீர்களும் தனகு தனதான எனவும் “தனதன தான தன' எனவும் 'தனஞ தனதனன’ என வருதலும் அமையும். 100 முதல் 107 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின.

யாப்பு 2

வேத வேள்வியை நிந்தனே செய்துழல்

தான தானன தானன தானன. எனவரும் 108-ஆம் பதிகம், நான்கடிப் பாடலாய் அதன்மேல் ஈரடிகள் வைப்பாகப்பெற்று வந்தமையால் நாலடிமேல் வைப்பு என வழங்கப் பெறுகின்றது. இதன்கண் தான தண்ன ஆதலும், தானன தன. தன ஆதலும் பொருந்தும். திருநாவுக்கரசர் அருளிய