பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

பன்னிரு திருமுறை வரலாறு


முதல் திருமுறையில், 116, 117-என்னும் எண் பெற்ற திருப்பதிகங்கள் வியாழக்குறிஞ்சி' என்ற பண்ணில் அமைந்தன. மூன் ருந்திருமுறையில், 56, 57-ஆம் பதிகங்கள் பஞ்சமம் என்ற பண்ணுக்கு உரியன. நான்காந் திருமுறையில் 80 மு. த ல் 118-வரையுள்ள பதிகங்கள் திரு விருத்தம் எனப் பெயர் பெற்றன. ஏழாந் திருமுறையில் 17 முதல் 28 வரையுள்ள பதிகங்களிற் பல நட்டராகம் என்ற பண்ணிலும், 97 முதல் 100 வரையுள்ள பதிகங்கள் பஞ்சமம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இவை யாவும் இயற்றமிழ் யாப்பின் படி கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களே. ஆயினும் இவற்றுள் திருவிருத்தப் பதிகங்கள் மட்டும் கட்டளேக் கலித்துறை என்ற முறை யில் பாடப்பெறுகின்றன . ஏனேய பதிகங்கள் எழுத்துப் பிரிந்திசைக்கும் முறைபற்றி வெவ்வேறு யாப்பு விகற்பங்களாகப் பாடப்பெற்று வருவதனைத் தேவ ர ஒதுவார் பலரும் நன்குனர்வர்.

அசையும் சீரும் இசையொடு சேர்த்து எழுத்துப் பிரிந்திசைத்தலாகிய இசை முறையினால் முதல் திரு முறையில் நட்ட பாடைப்பண்ணில் அமைந்த யாப்பு விகற்பங்கள் நான்கும், இரண்டிசண்டு யாப்பு வகைக ளாகப் பிரிந்து எட்டுக் கட்டளேயாகிய திறத்தை யாழ் நூலாசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

இனி, இயற்றமிழில் வேறு வேருகிய யாப்பு விகற் பங்கள் சில ஒத்த ஒசைபற்றியும் சீர் நிலேயிலுைளவாம் ஒத்த தாளங்களின் இயைபு பற்றியும் ஒரு கட்டளே யாக அடக்கப் பெறுதலும் உண்டு. திருஞானசம்பந்தர் அருளிய இரண்ட ந் திருமுறையில் 54 முதல் 82 வரை யுள்ள இந்தளப் பண்ணுக்குரிய பதிகங்களில் பத்து யாப்பு விகற்பங்கள் உள் ளன. தேவுவந்த இந்தளத் தின் செய்திக்கு நான்கு எனத் திருமுறைகண்ட