பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

பன்னிரு திருமுறை வரலாறு


என்பது சுந்தரர் பாடிய திருப்பாடல். இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய பெருமக்கள் இருவரது இசைத்தமிழ்த் திறத்தையும் அன்னேர் பாடி பருளிய தெய்வத் தமிழ் இசையில் தோய்ந்து மகிழ்ந்த சுந்தரசது இசைத் தமிழ்ஆற்றலையும் இனிது புலப் படுத்துவதாகும்.

தெய்வத்தைப் போற்றிய இசைப்பாடலே வாரம் ’ என வழங்குவர் இளங்கோவடிகள். வாரம் என்ற சொல், முதல் நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசையியக்கம் நான்கினுள் ஒன்ருய்ச் சொல்லொழுக்க மும் இசையொழுக்கமும் நிரம்பிய இசைப்பாடலேக் குறித்த பெயராகும். இழுமென வொழுகிய இன்னே சையும் செம்பாகமாகப் பொருளுணர்த்தும் தெளிவும் அமைந்தவை மூவர் முதலிகள் அருளிய திருப்பதிகங் களாதலின், அவை தேவாரம்' என வழங்கப்பெறுவன வாயின என்பது முன்னர் விளக்கப்பெற்றது.

வார இயக்கத்தில் அமைந்த இத்தெய்வ இசைப் பாடல்களுக்கு இசைபுணர்குறிநிலே யுணர்ந்து இசை யமைத்துப் பாடுவதென்பது, இசைத்திறத்தில் முழுவ தும் வல்ல நல்லிசைப் புலவர்களால்தான் முடியும். இசைத் துறையில் நிரம்பிய தேர்ச்சியில்லாதார் இயற் பாடலொடு புணர்க்கும் வாரஇசை, பாடற்பொருளோடு இயைந்து ஒன்ருகாது சிதையும் என்பர்.

'முதல்வழியாயினும் யாப்பினுட் சிதையும்

வல்லோன் புனரா வாரம் போன்றே (தொல்-மரபு. 107) எனத் தொல்காப்பிய மரபியலிற் காணப்படும் நூற் பாவில் இசைத் துறையில் மிகத் தேர்ச்சி பெற்றவர் களாலன்றி ஏனேயோராற் புணர்த்தற்கரிய நுட்பம் வாய்ந்தது வார இயக்கம்’ என்ற உண்மை உவமை யாக எடுத்தானப் பெற்றமை காண லாம். எனவே