பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 565

'பாடுவாரிசை பல்பொருட் பயனுகர்ந் தன்பாற்

கூடுவார்துனேக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடுவார் பொரு ளானவன் செறிபொழில் தேவூர் ஆடுவானடி யடைந்தனம் அல்லலொன்றிலமே (2.82-5) ‘தென்தமிழ்க்கலே தெரிந்தவர் பொருந்திய தேவூர்

அன்பன் சேவடியடைந்தனம் அல்ல லொன் றிலமே”

(2-82-7) "கலவமாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை

நீர்நெகிழ்த்திசை குலவுமாறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்’

(2-52-7) என வரும் திருப்பதிகத் தொடர்களால் இ னி து விளங்கும்.

தமிழ்நாட்டில் இசைத் திறத்தில் வல்ல ஆடவரும் மகளிரும் நாட்காலேயே துயிலெழுந்து நீராடித் தூய சிந்தையுடன் திருக்கோயிலையடைந்து இறைவனது அருளியல்பினே நினேந்து ஆரா அன்பினல் நெஞ்ச நெக்குருகிக் கண்ணிர் மல்கி இனிய இசைப்பாடல் களேப் பாடியும், யாழ் வீணே முழவு மொந்தை முதலிய இசைக் கருவிகளே வாசித்தும், இசைப் பாடல்களின் சுவை நலங்கள் புலப்படும் வண்ணம் விறல்பட ஆடி யும் தெய்வ வழிபாட்டில் மகிழ்ந்தார்கள்.

"துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ் சுனேயிடை

மூழ்கித்துதைந்த சிந்தைப் பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் (1.8-10) 'புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துடனேத்தப்

புனேயிழையார் அண்ணலின் பாடலெடுக்குங் கூடலாலவாய்' (1-7-8; 'அஞ்சுடரோ டாறுபத மேழினிசை யெண்ணசிய

வண்ணமுளவாய் மஞ்சரொடு மாதர்பலருந் தொழுது சேரும் வயல்

வைகாவிலே (3-71-6)