பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566

பன்னிரு திருமுறை வரலாறு


இசை வரவிட்டியல் கேட் பித்துக்கல்ல வடமிட்டுத்

திசை தொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே! j

[3–9-6

“பண்ணிய தடத்தொடிசை பாடும் அடியார்கள்

நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே (2.83-2) என வரும் திருப்பதிகத் தொடர்கள், பண்டை நாளில் இசையில் வல்ல ஆண்களும் பெண்களும் திருக் கோயில்களிற் சென்று இ ைற வ ன் புகழைப் பண்ணுர்ந்த பாடல்களாற் பாடி வழிபாடு செய்த திறத்தை நன்கு புலப்படுத்துவன.

தமிழேயன் றிப் பிற மொழிகளேத் தாய்மொழியாகப் பெற்று வேறு திசையில் வாழும் ஆடவரும் மகளிரும் தமிழகத்திலுள்ள திருக்கோ யில்களே வழிபட்டு இங்குப் பாடப்பெறும் இசைத் தமிழ்த் திறங்களே நன்குணர்ந்து பாடும் பயிற்சியைப் பெற்றனர். பொழுது புலர்வதன் முன்னரே துயிலெழுந்து நீர்மூழ்கித் திருக்கோயிலில் வழிபட வரும் மாந்தரது மனவிருள் நீங்கும் வண்ணம் தாம் பயின்ற இசைத் தமிழ்ப் பாடல்களேயும் முன்னரே கற்றுணர்ந்த வடமொழித் தோத்திரங்களேயும் ஏனே த் திசைமொழி யிசைப்பாடல்களையும் வீணே முதலிய நரம்புக் கருவிகளில் வைத்து வாசித்து மகிழ்ந்தார் கள். இந்நிகழ்ச்சி,

'ஊறுபொரு ளின்றமி மியற்கிளவி தேருமட மாதருடனர்

வேறு திசை யாடவர்கள் கூற இசை தேருமெழில்

வேதவனமே’ (3–78–4)

எனவும்,

  • தென்சொல்விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்

நரம்பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்'

(2–92–7] எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர் களால் நன்கு புலனுதல் காணலாம்.