பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 58;

யால் இணே கிளே, பகை, நட்பு என்னும் நான்கினேயும் ஆராய்ந்து இசைபுணருங் குறிநிலேயெய்த நோக்கி, ஏழிசையினேயும் பாலேயாக நிறுத்தியபின், எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு. தாக்கு என்னும் எண்வகைத் தொழிலினுலும் பண்ணி யமைத்த பண்ணுனது மேற்குறித்த ஒன்பது இலக் கணத்தாலும் உணர் தற்பாலதென்பது நன்கு புலனும். எட்டிருங்கலே’ என்பன யாழ்க்கருவியிலே இசை எழுப்புதற்குச் செய்யும் பண்ணல், பரிவட்டனே, ஆராய்தல், தைவரல், செலவு, விளேயாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எட்டினேயும், இசை நிலேயின் தி தின் மை ஆராய் தற்குச் செய்யும் வார்தல், வடித்தல் உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ள ல், பட்டடை என்னும் எட்டினேயும் ஒருங்கே குறிக்கும் எனக் கொள்வர் யாழ் நூலாசிரியர்.

பண்களாவன பாலேயாழ் முதலிய நூற்று மூன்று? என்ருர் பரிமேலழகர். ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும் என்பது பிங்கலந்தை. பாலே, குறிஞ்சி. மருதம், செவ்வழி இவை நான்கும் பெரும்பண்கள், நாற்பெறும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலேயாழ்த்திறன் 5, குறிஞ்சியாழ்த் திறன் 8, மருதயாழ்த் திறன் 4, செவ்வழியாழ்த் திறன் 4. ஆக 21. இவ்விருபத்தொன்றும் அகநிலே, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண் பத்துநான்காகும். இசைச் சுரங்களின் மாத்திரை வேறுபாட்டிேைல முற்குறித்த ஒவ்வொரு பண்ணும் அகநிலே, புற நிலை, அருகிய ல், பெருகியல் என நால் வகைச் சாதியாயின என்ற நுட்பத்தை யாழ் நூலிற் காணலாம். இங்குச் சுட்டிய பழந்தமிழ்ப் பண்கள்