பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600

பன்னிரு திருமுறை வரலாறு


சுந்தரரால் நள்ளிரவில் பாடப்பெற்றனவாகச் சேக் கிழாரடிகள் குறித்த இவ்விரு பதிகங்களும் முறையே கொல்லிக் கெளவாணம், கொல்லி என்ற பண்களில் அமைந்திருத்தலேக் கூர்ந்து நோக்குங்கால், இவ்விரு பண்களேயும் இராப்பண்களாக வகுத்த முன்னேரது பகுப்புமுறையின் துட்பம் இனிது புலம்ை.

தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண் வகுக்கச் செய்த திருமுறைகண்ட ேச ழ ன் காலத்தும் சேக்கிழார் காலத்தும் நிலவிய இசைமரபும், சாரங்க தேவர் சங்கீத ரத் தளுகரத்திற் குறித்த தேவாரப் பண் களின் இசைமரபும் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் வழங்கிய இசைமரபாகும். தேவாரத் திருப்பதிகங்களே முன்னேர் பாடிய இசை முறையின் படி இக்காலத்தும் பாடிக்கேட்டு மகிழும் வண்ணம் தேவாரப் பண்களின் இலக்கணங்களை உணர்ந்துகொள்ளுதற்குச் சாரங்க தேவர் இயற்றிய இசைநூல் ஓரளவு துணைபுரியும் நிலேயில் அமைந்திருத்தல் கா ன ல ள ம். தமிழ் முன்னேர் கண்ட ஏழ்பெரும்பால்ே ஐந்து சிறுபாலே ஆகிய பன்னிருபாலேகளும் நிலேயான இசையுருவங்க ளோகும். இவற்றின் முதல் நரம்பு வேறுபடுமிடத்தும் இந்நிரல்களின் இசை வேறுபடுதலில்லே. சங்கீத ரத்தினகரத்திற் கூறப்படும் இடைக்காலத்து மூர்ச்சனை களோ அவ்வம் மூர்ச்சனைகளின் முதலில் நிற்கும் சுரத்தினற் பெயர்பெற்றவை. அவை காகலி அந்தரங்க ளோடு கூடிவருதலாலே இசை வேறுபடுமிடத்தும் அவற்றின் பெயர் வேறுபடுதலில்லே,

இக்குறிப்புக்களே யுளத்திற்கொண்டு, த மி ழ ர் வகுத்த நூற்று மூன்று பண்களின் அமைப்பினேயும் சங்கீத ரத்தனகரத்திற் குறிக்கப்பெற்ற மூர்ச்சனைகளே யும் ஒப்புநோக்கி யாராய்ந்து, தேவாரப் பண்களின் இசையுருவங்களேயும் அப்பண்கள் அமைந்த பதிகங்