பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612

பன்னிரு திருமுறை வரலாறு


தக்கேசிப்பண் மருதப் பெரும்பண்ணின் அகநிலை யாதலால், அரும்பாலேயில் (தீரசங்கராபரணத்தில்) பிறக்கவேண்டுமென்பது இடைக்காலத்து மரபு. காகலி அந்தரங்களோடு கூடிய மூர் ச்சனைகளிலே ஷட்ஜாதி மூர்ச்சனையே தீரசங்கராபரணமாகும். ஆதலால் மேலே தந்த குறிப்புக்களுக்குப் பொருந்தும் வண்ணம் தக்கேசியை கி மி தி நி" என்னும் சுத்த ஒளடுவ ராக மாகக் கொள்வர் யாழ் நூலார். தக்கே சிப் பதிகங்களைப் பிற்காலத்தார் காம்போதியிற் பாடி வருகின்றனர்.

70. கோல் லி

இது, மருதப் பெரும்பண்ணின் நவீர்” என்னுந் திறத்தின் புறதிலேயாய்ப் பண்வரிசையில் 70-என்னும் எண் பெற்றது. இப்பண் மூன்ருந் திருமுறையில் 24 முதல் 41 வரையுள்ள பதிகங்களிலும், நான் காந் திரு முறையில் முதற் பதிகத்திலும், ஏழாந் திருமுறையில் 81 முதல் 37 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. திருநாவுக்கரசர் அருளிய திருநேரிசை, திருவிருத்தம் என்ற பதிகங்களையும் கொல்லிப் பண்ணுக்கு உரியன வாக இடைக்காலத்தார் கொண்டனர். கொல்லியின் பழைய இசையுருவம் இதுவெனத் திட்டமாகக் கூறுதற் கியலவில்ல. கொல்லிப் பண்ணுக்குரிய பதிகங்களைப் பின்னுள்ளோர் நவரோசு என்னும் இராகத்திற் பாடுதலே மரபாகக் கொண்டுள்ளனர்.

78. இந்தளம் மருதப்பெரும் பண்ணின் வடுகு என்னுந் திறத் தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 73-என்னும் எண் பெற்றது இந்தளம். இப்பண் இரண்டாந் திருமுறையில் 1 முதல் 39 வரையுள்ள பதிகங்களிலும், நான்காந் திரு முறையில் 16, 17, 18-ஆம் பதிகங்களிலும், ஏழாந் திருமுறையில் 1முதல் 12வரையுள்ள பதிகங்களிலும்,