பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பன்னிரு திருமுறை வரலாறு


நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி ஒன்றியவன் புள்ளுருகப் போற்றுவா ருடையவர சென்றுமுல கிடர் நீங்கப் பாடியவேழெழுநூறும் அன்று சிறப் பித்தஞ்சொற் றிருப்பதிகம் அருள் செய்தார்." என வரும் பாடலில் சேக்கிழார் நாயனர் சுந்தரர் கூறிய தொகையினே விளக்குதல் காண்க,

‘ஏழு எழுநூறு இரும்பனுவல்’ என்னும் இத் தொடர், நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகம் என்றே பொருள்படுவதாகும். இவ்வாறே நம்பியாண் டார் நம்பியும் பதிகம் ஏழெழுநூறு பகருமா கவியோகி’ எனத் திருநாவுக்கரசரைப் போற்றுமுகத்தால் அரசர் பாடிய திருப்பதிகங்கள் ஏழு எழுநூறு அஃதாவது நாலாயிரத்துத் தொளாயிரம் என்றே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னுள்ள இப்பெருமக்களிரு வரும் கூறிய தொகையினே யுளத்துட்கொண்டே,

திருநாவுக் கரையரெனுஞ் செம்மையாளர் தீயமணர் சிறை நீங்க அதிகைமேவுங் குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச்சூலேக்

கொடுங் கூற்ருயின் வென்ன எடுத்துக் கோதில் ஒருமானேத்தரிக்கும் ஒருவரையுங் காறும் ஒரு நாற்பத்தொன் பதின யிரமதாகப் பெருநாமப் புகலூரிற் பதிகங்கூறிப்

பிஞ்ஞகனர் அடியினைகள் பெற்றுள்ளாரே. எனவரும் திருமுறைகண்ட புராணச் செய்யுளுக்கும் உரை காணுதல் வேண்டும். திருநாவுக்கரையரெனுஞ் செம்மையாளர் கூற்ருயின எனத் தொடங்கும் பாடல் முதலாக ஒரு வரையு மல்லாது எனத் தொடங்கும் திருப்புகலூர்த் திருத்தாண்டகத்தின் இறுதிச் செய்யுள் ஈருக நாற்பத்தொன்பதினுயிரம் திருப்பாடல்களேப் பாடினர் என்றே இத்திருமுறைகண்ட புராணச் செய் யுளும் கூறுதல் காணலாம். திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்கள் பத்துப்பாடல்களைக் கொண்டனவாத

1. பெரிய - ஏயர்கோன் புராணம் - 150ம் பாடல்.