பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3

பன்னிரு திருமுறை வரலாறு

களே இன்னிசையுடன் பாடிப் போற்றும் இசைத் தொண்டிலும் ஈடுபட்டுத் தம்மை ஆட்கொண்ட இறைவரது அருளின் வெளிப்பாடாகிய திருமுறுவலாம் உவகைக் குறிப்பினை நேரிற்கண்டு மகிழ்ந்தார் என்பதும்;

" சலம்பூவோடு தூய மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ? {4-1-6} எனவும்,

" தொண்டலாம் இசைபாடத் துமுறுவல்

அருள்செய்யும் ஆரூரரை ’’ £4–5–4}

எனவும் வரும் அவருடைய வாய்மொழிகளால் இனி துணரப்படும். இவ்விரு பெருமக்கள் சென்ற நெறியை அடியொற்றிப் பின் வந்த நம்பியாரூரரும் தமக்கு முன்னுள்ள அப்பெருமக்கள் அருளிய திருப்பதிகங்களே இன்னிசை நலம் பொருந்தப் பாடியும் தாம் இயற்றிய திருப்பதிகங்களே முழவு குழல் முதலிய இசைக்கருவி களுடன் பொருந்தப் பாடியும் இறைவனே இசையாற் பரவிப் போற்றுதலேயே தொழிலாகக் கொண்ட அடியார்கள் விரும்ப இசைத் திருத்தொண்டு புரிந்துள் ளார். இச்செய்தி,

நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும்

பாடிய நற்றமிழ் மாலே சொல்லியவே! சொல்லியேத்து கப்பான [7–67-5}

೯7357 €ಟ್ಟ!

  • மந்தம் முழவுங் குழலுமியம்பும் வளர் நாவலர்கோன்

நம்பியூரன் சொன்ன சந்தம்மிகு தண்டமிழ் மாலேகள் கொண்

டடிவீழவல்லார் தடுமாற்றிலரே ! [7–4–10] எனவும்,