பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 64?

யெதுகையாய் வருவது, வழிமொழி எனப்படும். இவ் வாறு வழிமொழித் திருவிராகமாக அமைந்தது, மூன் ருந் திருமுறையில் சுரருலகு என்னும் முதற் குறிப்புடைய 7ே-ஆம் பதிகமாகும். இப் பதிகத்திற்கு வழங்கும் வழிமொழி என்ற பெயர், ஆளுடைய பிள்ளேயாரால் இடப்பெற்றதே என்பது, தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே எனவரும் இப்பதிகத் திருக்கடைக்காப்பால் இனிது விளங்கும்.

ஒரு பாடலில் முன் வந்த சீரும் அடியும் அவ்வாறே மீட்டும் மடக்கி வரப்பெறுவது, மடக்கு’ எனப்படும். மூன்ருந் திருமுறையில் 94 முதல் 99 முடியவுள் ள் திருப்பதிகங்கள், பாடல் தோறும் இரண்டாம் அடியே மூன்ரும் அடியாக இடை மடக்காய் அமைந்துள்ளன.

மூன்ருந் திருமுறையில் 113 முதல் 116 வரையுள்ள திரு இயமகப் பதிகங்கள் தமிழில் சந்த இயமகத்திற் குரிய இலக்கியங்களாகும்."

முதல் திருமுறையில் 90 முதல் 96 வரை ப ைமந்த குறிஞ்சிப் பதிகங்களும், மூன்றந் திருமுறையில் 40,41 என்னும் எண்ணுள்ள கொல்லிப் பதிகங்களும் திரு இருக்குக்குறள் என வழங்கப் பெறுவன. இவை இரு சீரடியாகிய குறளடி நான் கிளுல் இயன்ற செய்யுட் களால் அமைந்தன. இதன் பெயர்க் காரணம் முன்னர் விளக்கப்பட்டது . வடமொழி மறையாகிய இருக்கு வேதத்தினைப் போன்று தமிழ் மறையாகத் திகழ்வது இதுவென்பார், இதனைத் தமிழ் இருக்குக் குறள் எனப் போற்றுவர் சேக்கிழார். திருவள்ளுவர் அருளிய திருக்குறள் யாப்பு, முதலடி நாற்சீராய்

இெத்தால் பக்கம் 192

இந்நூல் பக்கம் 498.

, , , 46 i.

*,---