பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் §5?

என்னும் பிரமபுரம் பூமகனூர் என முதல் திருப் பாடலின் முதலிலும் இயைந்து நின்று பொருட் டொடர்பு பற்றிய அந்தாதியாக மண்டலித்து முடிந் திருத்தல் காணலாம்.

இவ்வாறு இப்பதிகத்திலுள்ள பன்னிரு திருப் பாடல்களும் சீர்காழிப்பதிக்குரிய பன்னிரு திருப்பெயர் களால் முன்னும் பின்னுமுள்ள திருப்பாடல்களுடன் இணைந்து ஒரு வட்டமாக அமைந்து செல்லுதலால், இப்பதிகம் சக்கரம்’ என்னும் பெயருடையதாயிற்று. இப்பெயர் ஆளுடைய பிள்ளையாராலேயே இடப்பெற்ற தென்பது "அயனுர்மேல் இச்சக்கரம் சீர்த் தமிழ் விரகன் தான் சென்ன தமிழ் தரிப்போர் தவஞ் செய்தோரே” என வரும் இதன் திருக்கடைக்காப்பால் இனிது விளங்கும். பிற்காலத்தார் இதனைச் சக்கர மாற்று எனக்குறித்தனர்.

திருஞான சம்பந்தர் அருளிய இச் சக்கர மாற்றின் அமைப்பும், பிற்கால யாப்பணி நூ லார் பாடலெழுத்துக் களே ஆரைகளில் அமைத்துக்காட்டும் சக்கர பந்தத் தின் அமைப்பும் தம்முள் வேறென்பது, சக்கரமாற்று” எனவும் சக்கர பந்தம்’ எனவும் வழங்கும் அவற்றின் பெயர் வேறுபட்டால் நன்கு புலனும். அன்றியும் தேவாரத் திருப்பதிங்களில் அமைந்த சக்கரமாற்று ஒரு பதிகமாய் அப்பதிக முழுவதும் ஒரே வட்டமாய் அமைந்தது; யாவர்க்கும் பொருள் இனிது விளங்க இயல்பு வகையாற் பாடப்பெற்றது. பிற்காலத்தார் கூறும் சக்கரபந்தம், ஒரு பாடலாய் வட்டங்கீறி ஆரை களில் எழுத்துக்களே அமைத்துக் காட்டும் நிலையில் அமைந்தது; எழுத்தெண்ணிச் செயற்கை வகை யாற்பாடப்பெறுவது.