பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704

பன்னிரு திருமுறை வரலாறு


மான் திருமுன் முன்னிலேப்பரவுதலாக எடுத்துரைத்துப் போற்றுதற்கும், உலக மக்களுக்கும், தமது தெஞ்சத்திற் கும் தெளிவாக விரித்துரைத்தற்கும் ஏற்றவாறு விரிந்த சொல் நடையும், எல்லார்க்கும் எளிதிற் பொருள் விளங்கும் தெளிவும் பெற்றுத் திகழ்வன திருத்தாண்ட கத் திருப்பதிகங்களாகும். இறைவனது இயல்பினைக் கூறுமிடத்து, அரியானே அந்தணர்தம் சிந்தையானே' என இவ்வாறு இரண்டாம் வேற்றுமை யுருபு அடுக்கிவரும் நிலையில் அமைந்த ப தி க ங் க ளு ம், இறைவன் இன்ன இன்ன இடங்களில் இன்ன இன்ன தன்மையில் எழுந்தருளியுள்ளான் எனக் கூறும் பதி கங்களும், வினே முற்றுக்களே யடுக்கிக்கூறும் பதிகங் களும், இறைவனுடைய அடையாளங்களைத் தொடர்பு பட எடுத்துக் கூறும் பதிகங்களும், வேற்ருகி விண்ணுகி நின்ருய் பொற்றி என்றவாறு அப்பெரு மானே முன்னிலேப்படுத்திப் போற்றும் பதிகங்களும், அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி என்ருங்கு அவ்வி ைறவனது திருவடிப் பெருமைகளே விளக்கும் பதிகங்களும், தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி' என்றவாறு இறைவன் திருக்கோயில் கொண் டருளியுள்ள திருத்தலங்களைத் தொகுத்துக் கூறும் பதிகங்களும், இறைவன் இயல்பினே உலகமக்களுக்குத் தெளியக்காட்டி அறிவுறுத்தும் நிலையில், விற்றுண் ஒன்றில்லாத நல்கூர்ந் தான் காண்’ என்ருங்கு காண்” என்றும், துண்டு சு ட ர னே ய சோதிகண்டாய்” என்ருங்கு கண்டாய்' என்றும் அறிவுறுத்தும் பதிகங் களும், இறைவன் இன்னின்ன செயல்களேச் செய்தா ரெனவிளக்கும் முறையில் நோதங்கமில்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நினைந்துருகும் அடியாரை நையவைத்தார் என்ருங்கு அமைந்த பதிகங்களும், இறைவன் எல்லாப் பொருள்களுமாகி விளங்குகின்றன் என நினைவுகூரும் முறையில், 'குருகாம் வயிரமாம்