பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722

பன்னிரு திருமுறை வரலாறு


விளங்கும் இத்திருவொற்றியூரின் இயற்கை வளமே யாகும். இதனை விற்ருல் பெரும் பொருள் கிடைக்கு மென நினைத்து விற்றுவிடாதே. இதன் சிறப்பினே நோக்காது விற்றுவிட்டால் பின் இதுபோன்றதொரு வளமார்ந்த ஊரினை நீ எங்கும் பெறுதற்கு @కుడి)* என ஒற்றியூரின் சிறப்பினே அறிவுறுத்துவதாக அமைந்தது.

  • சுற்றிவண்டியாழ் செயுஞ் சோமேயுங் காவுந் துதைந்திலங்கு

பெற்றிகண்டால் மற்றியாவருங்கொள்வர், பிறரிடைநீ ஒற்றிகொண்டாய் ஒற்றியூரையுங் கைவிட் டுறுமென்

றெண்ணி விற்றிகண்டாய் மற் றிதுவொப்பதில்லிடம் ಮಿಡ್ಟ್ರೀ

(4-6-8)

எனவரும் திருநேரிசையாகும். இங்ங்ணம் உவகைச் சுவையும் நகைச்சுவையும் அமைய அப்பர் அருளிய திருப்பாடல்கள் பலவுள."

தொண்டர்க்குத் தொண்ட ராம் நற்போற்றினே விரும்பிய நாவுக்கரசர், அடியார்க்கடிய ராய் வாழும் அத்கொண்டின் நிலேயினே த் தவிரத் தமக்குப் பேரின் பம் தகும் பதவி பிறிதொன்றுமில்லே என்பதனை,

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்குங் கருத்தொன்றிலோம் வண்டுசேர் மயிலாடு துறையரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே "

[5–39–3]

என்ற பாடலால் அறிவுறுத்திய திறம் ஒர்த்துணரத் தக்கதாகும். அடியார்க்குத் தொண்டுபட்டு மனிதரில்

கி. இப்பாடல்களின் நயத்தின் திருவாளர் கோ. சுப்பின் மணிய பிள்ளேயவர்கள் எழுதிய "அப்பர் விருத்து’ என்னும் துன்னிற் காணலாம்,