பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் 733

தோழமை நெறியில் நின்ற நம்பியாரூரர், தம் மைத் தடுத்தாட்கொண்ட இறைவனே நோக்கி, *அத்தா உனக் காளாய் இனி அல்லேன் எனலாமே? என வினவும் பகுதியும், யாவராலும் அணுகு தற்குரிய சிவபெருமானது திருக்கோலத்தை விரித்துரைத்து ‘அடிகேள் உனக்காட்செய அஞ்சுதுமே எனக் கூறும் பகுதியும், ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே என அஞ்சிக் கூறும் பகுதியும், ஒனகாந்தன் தளிப்பெருமானே நோக்கி நகைச்சுவை பட உரையாடும் பகுதிகளும், பாச்சிலாச்சிராமத்து இறைவனை நோக்கி, இவரலாது இல்லையோ பிரானுர்’ என வும், ஆரூரர் இறைவரை நோக்கி, திருவாரூரீர் வாழ்ந்து போதீரே எனவும் ஊடிக்கூறும் பகுதிகளும், எனக்கு இன்னது செய்கவென இறைவனே ஏவும் முறையில் அமைந்த பதிகங்களும் (20, 25, 46), கைக்கிளே முதலிய அகத்துறைப் பொருள்பட அமைந்த திருப்பதிகங்களும், அன்பரது துயரினப் போக்க வேண்டுமென வேண்டும் பதிகமும், ஆரூரர் தம் குடும்ப வாழ்வுக்கென இறைவன் பால் பொன்னும் பொருளும் பிறவசதிகளும் ஆகியவற்றை வேண்டிப் பெறும் முறையில் பாடிய திருப்பதிகங்களும் ஏழாந் திருமுறையில் அமைந்துள்ளன. கயிலேக்குச் செல்லும் வழியில் தானெனே முன் படைத் தான் ” என்னும் பதிகம், சுந்தார் இறைவனருளால் தம் ஊன் உயிர் வேரு கும் நிலேயில் கயிலேப் பெருமான் கழல டைந்த நெறிமுறையை அழகுபெறத் தெளிவாக அறிவுறுத்துவ தாகும்.

இறைவனேக் கண்ணுரக் கண்டும் அவனருளால் பல நலங்களைப் பெற்றும் மகிழ்ந்த சுந் தரர், அம் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் முறையில் அருளிய திருப்பதிகங்களும், இறைவனே உணராத நிலையிலும் அருளாளனுகிய அப்பெருமான் தம் பொருட்டுச் செய்த