பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 809

  • இனிய வுளவாக இன்னுத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என்ருர் தெய்வப்புலவர். தனக்கும் பிறர்க்கும் இனிமை விளேக்கும் நற்செயல்கள் பல இருக்க அவற்றை மேற் கொள்ளாமல், தீமையே தரும் செயல்களே மேற் கொண்டு வருந்தும் அறிவிலார் இயல்பினேப் புலப்படுத் தும் நிலையில் அமைந்தது, கனியிருக்கக் காய் கவர் தல்’ என்னும் இப்பழமொழியாகும். மருள் நீக்கியா ராகிய திருநாவுக்கரசர், தம் வாழ்நாளிற் பெரும்பகுதி யைப் புறச்சமயச் சூழலிற்புக்கு வீணே கழித்தமை யினேக் கருதிக் கையற்றுப்பாடிய பழமொழித் திருப் பதிகத்தில்,

  • மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான்

தாள்தொழாதே

உய்யலாம் என்றெண்ணி உறிதுாக்கி யுழி தந்தென்

உள்ளம் விட்டுக்

கொய்யுலாம் மலர்ச்சோலேக் குயில்கூவ மயிலாலும்

ஆகுரரைக் கையினுற் ருெழா தொழிந்தே கணியிருக்கக் காய்கவர்ந்த

கள்வனேனே ’ [4–5–1]

எனவரும் திருப்பாடலில் இப்பழமொழியை எடுத்தாண் டுள்ளமை காணலாம்.

அருளுடையாராகிய செல்வர்கள், தம்பாலுள்ள செல்வத்தை வறியவர்களுக்குக் கொடுத்து, அத ல்ை அவர்கள் எய்தும் இன்பத் தினேக்கண்டு தாமும் மகிழ் வர். இவ்வாறு கொடைத்திறத்தால் அடையும் இன் பத் தினே ஈத்துவக்கும் இன்பம்’ என்பர். தம்பாலுள்ள பொருளேத் தாமும் நுகராது பிறர்க்கும் வழங்காது இறுகச் சேர்த்து வைத்து இழந்து போகும் வன் கண்மை யுடையோர், தம்மிடத்திலுள்ள பொருளே வறியோர்க் குக் கொடுத்து அதனுல் அவர்கள் டைபும் இன்பத்