பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 823

திருக்குறளில் முப்பத்தாரும் அதிகாரமாக அமைந் தது, மெய்யுணர்வு என்னும் அதிகாரமாகும். மெய் யுணர்வாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களாலன்றி உண்மை யான் உணர்தல். இதனை வடநூலார் தத்துவ ஞானம் என்ப. இதுவும் பற்றற்ருன் பற்றினேப் பற்றியவழி உனதாவது ” என்பர் பரிமேலழகர். உளதோ இலதோ என்னும் ஐயத்தினின்றும் நீங்கி, மெய்ப் பொருளாகிய தெய்வம் ஒன்று உண்டு எனத் தெளிந்து மெய்யுணர்த் தார்க்கு எய்தி நின்ற இவ்வுலக வாழ்க்கையினும் இனி எய்தத் தகுவதாகிய வீட்டுலகம் மிகவும் அணுகிய தன்மைத்து என்பார்,

ஐயத்தி னிங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணரிய துடைத்து '

என் ருர் தெய்வப் புலவர்.

  • ஐயமாவது பல தலேயாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினேப் பயனும் கடவுளும் உளவோ இலவோ என ஒன்றிற் றுணிவு பிறவாது நிற்றல்; பேய்த்தேரோ புனலோ, கயிருே அரவோ எனத் துணியாது நிற்றலும் அது. ஒருவாற்ருற் பிறர் விதங் களேந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமய நூல்கட்கும் இயல்பாகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய் என நிகழும் ஐயத்தினே யோகமுதிர்ச்சியுடை யார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வராகலின், அவரை ஐயத்தின் நீக்கித் தெளிந்தார் ’ என்றும், அவர்க்கு அவ்வனுபவ வுணர்வு அடிப்பட்டு வர வரப் பண்டை உலகியலுணர்வு தூர்ந்து வருமாகலின், அதனேப் பயன் மேலிட்டு வையத்தின் வானம் நனிய துடைத்து என்றும் கூறினர் ; கூறவே ஐயவுணர்வும்

பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது ”