பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

856

பன்னிரு திருமுறை வரலாறு


தல், தெளிதல், நிட்டைகூடுதல் ஆகிய அறிவுத் தொழில் மாத்திரையால் இறைவனே வழிபடுதலாகும். இந்நெறியின,

  • துண்ணறிவால் வழிபாடு செய்யுங் காலுடையான் ”

(1–5-4)

  • ஊனத்திருள் நீங்கிடவேண்டில்

ஞானப்பொருள் கொண்டு அடிபேணும் ” (1-38-3)

என ஆளுடைய பிள்ளையாரும்,

' ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்

ஞானத்தால் தொழுவேனுனே நானலேன் ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தா யுனே நானுத் தொழுவனே ’’ (5-91–3)

என ஆளுடைய அரசரும்:

" நத்தார்புடை ஞானன் ” (7–80–1) ஞானமூர்த்தி நட்டமாடி ’’ (7-8 1-7)

என ஆளுடைய நம்பியும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேற்காட்டிய குறிப்புக்களால் பு ற த் .ெ த பூழி ல் மாத்திரையானே உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் சரியையும், புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டாலும் அருவுருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் கிரியையும், அகத்தொழில் மாத்திரையானே அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் யோகமும், இவ்வாறு புறத்தொழில் அகத் தொழில் இரண்டு மின்றி அறிவுத் தொழில் மாத்திரை யானே அம்மூன்று திருமேனிக்கும் மேலாய் அகண்டா கார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நிற்கின்ற சிவபிரானிடத்திற் செய்கின்ற ஞானமும் ஆகிய நால்வகை நன்னெறிகளும் தேவார ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பெற்றமை நன்கு புலம்ை.