பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 857

  • அறிதல் ஒப்புமையால் சரியை முதலிய நான்கும் ஞான மேயாம் எனவும், ஆயினும் அரும்பு மலர் காய் கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டால் முறையே ஒ ன் ற ற் கு ஒன்று அதிகமாய், நான்காம் எண்ணுமுறைமைக்கண் நின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம் எனவும், எனவே இந் நான்கினும் அறிவு நுணுகி வளரவளர, அறியாமை யாகிய மலமும் அம் முறையே தேய்ந்து தேய்ந்து வருதலின், அவற்றின் பயணுகிய சாலோக முதலிய நான்கும் முத்தியேயாம் எனவும், ஆயினும் அம் மல நீக்கமும் அவ்வாறு நிகழும் சோபான முறையானே அவை ஒன்றற்கொன்று ஏற்றமாய் அவற்றுள் நான் காம் என்னு முறைமைக்கண் நின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாம் ” எனவும் கூறுவர் சிவஞான முனிவர்.

இறைவன்ே அடைதற்குரிய இந்நால்வகை நன் னெறிகளையும் முறையே தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என வழங்குவர் சான்ருேர். இந்நால்வகை நெறிகளேயும் கடைப்பிடித்து ஒழுகுவோர் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், ஆகிய பத முத்திகளையும், சாயுச்சியம் ஆகிய பரமுத்தி யையும் அடைவர் என நூல்கள் கூறும். (சாலோகம் - இறைவன் உலகினே அடைதல்; சாமீபம் - இறைவன் அருகு இருத்தல்; சாரூபம் - இறைவன் உருவினேப் பெறுதல்; சாயுச்சியம் - இறைவனே அ ைட ந் து அவளுேடு இரண்டறக் கலத்தல்)

மேற்குறித்த ந ல் வ ைக மார்க்கங்களேயும் தொண்டு நெறி, மகன் மை நெறி, தோழமை நெறி, (இரண்டற்று) ஒன்றும் நெறி என வழங்குதல் பொருந் தும்.