பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868

பன்னிரு திருமுறை வரலாறு


தேவார ஆசிரியர் மூவரும் இறைவன் அருளால் அப்பெருமானே நேரிற் கண்டு அவனது இயல்பு உணர்ந்து வழிபட்டமை அவர்கள் வாய்மொழியால் தெளியலாம். ஆளுடைய பிள்ளேயார் தோடுடைய செவியன் என்ற பதிகத்துப் பெம்மான் இவன் அன்றே” எனச்சுட்டிக் காட்டியதோடு அமையாது, இறைவன் தன் அருள் உருவத்தினை அமணரும் குண்ட ரும் அலர் தூற்றும்படி தமக்குக் காட்டியருளிய தகைமையினே,

"அலேயாரும் புனல் துறந்த அமணர்குண்டர் சாக்கியர்

தொலேயாதங் கலர்துற்றத் தோற்றங் காட்டி யாட்

கொண் டர்’

என்ற அடிகளால் விளக்கியருளினர். இவ்வாறே அப்பரும் சுந்தரரும் இறைவனை நேரிற் கண்டு வழி பட்டமை அவர்கள் வாய்மொழியாற் புலம்ை. இவர் கள் வாழ்க்கையில் நடந்த சில அருட்செயல்களேக் குறித்து ஐயுறுவாருமுனர். இக் காலத்திலும் பலவியத் தற்குரிய செயல்களைக் கண்டு அவற்றின் காரணம் உணரப்பெருது மருளும் நாம், அவற்றின் காரணம் உணரலாக மையின் இஃது ஒன்று ைட த் தெ ன க் கொள்வதல்லது அவை நிகழ்ந்தன அல்ல என மறுத்து ஒதுக்குதல் தவ ஆகும். தேவார ஆசிரியர்கள் தம் மெய்யுணர்வின் பயனய பாடலிற் குறிப்பிட்டன. எல்லாம் உண்மையெனக் கொள்ளுதலே அறிவுடை யார் கடன். அவ்வாசிரியர்கள், தாம் காணும் அருட் செயல்கள் உலகில் நிகழா அருமை உடையன ஆத லேத் தெளிந்து, அவற்றின் உண்மையறியாது மருளும் ஏனைய மக்களுக்கு அவற்றின் உண்மைக் காரணத்தை உணர்த்திப் போதல் ஒன்றே அவர்தம் உண்மைநிலேயைப் புலப்படுத்தும் இறைவன் இவ் வாறு அருமையுடையனவற்றைக் காட்டி யருள் செய்தல் அன்பால் தனக்குரிமையுடைய அடியார் களின் பொருட்டே என்பதனை,