பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870

பன்னிரு திருமுறை வரலாறு


  • ஒதுவித்தாய்முன் அறவுரை காட்டி அமணரோடே

காதுவித்தாய் கட்டநோய் பிணிதீர்த்தாய் கலந்தருளிப் போதுவித்தாய் நின்பணி பிழைக்கிற் புளியம் வளரால் மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சியேகம்பனே’’ என்ற பாடல் இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும்.

கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் என்று முள்ன பொருள்கள் எனவும், அவற்றுள் கடவுள் நிலே மாரு முற்றறிவுடைய பொருளெனவும், உயிர்கள் அறி விக்க அறியும் இயல்பின எனவும், உலகம் நிலைமாறும் இயல்புடைய அறிவில் பொருள் எனவும் கூறுப. இவற்றின் உண்மை,

'கற்றுக்கொள்வன வாயுள தாவுள இட்டுக்கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுளின் நா முளோம் எற்றுக்கோ நமஞர் முனிவுண்பதே’’

என்ற திருக்குறுந்தொகையால் தெளிவுறத் தெரி கின்றது. உயிர்களாகிய நாம் நமல்ை முனியப்படும் எளிமையுடையோம் அல்லோம் என் பார். இதன் முதல் இரண்டடிகளாலும் உலகின் உண்மை கூறி, மூன் ரும் அடியில் கடவுள் உயிர் இவ்விருபொருளின் உண்மை யினை உணர்த்தியருள்கின்ருர் நாவுக்கரசர். கற்றைச் செஞ்சடையான் உளன்’ என்பதனே அடுத்து உயிர் களைத் தம்மோடு உளப்படுத்தி நாமுளோம் என்று கூறியதன் கருத்தாவது, அவனது ஆதரவால் அவ னுக்கு அடிமையாகிய நாமும் என்றும் பொன்ருத நிலையைப்பெற உரிய ராய் உளோம் என்பதாம்.

உயிரின் இலக்கணத்தினை உணர்த்தக் கருதிய சொல்வேந்தர், உயிரானது இருண் மலம் எனப்படும் ஆணவத்தால் மறைப்புண்டு யாதொரு பற்றுக்கோடும் இன்றி அறிவுவிழி கெட்டு ஒன்றுஞ் செய்ய இயலாது தடுமாறும் இயல்பினது என்பதனை,