பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1008

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

992

பன்னிரு திருமுறை வரலாறு


டாயர், ஆயனர் மூர்த்தியார் முருகர், உருத்திர பசுபதி யார், திருநாளைப்போவார், சண்டேசர், திரு நீலநக்கர், நமிநந்தியடிகள், ஏயர்கோன் கலிக்காமர், தண்டியடிகள், சாக்கிய நாயனர், சிறப்புலி நாயனர், சேரமான் பெருமாள், கூற்றுவ நாயனர் அதிபத்த நாயனர், கலிய நாயனுர், ஐயடிகள் காடவர்கோன், கணம்புல்லர், காரி நாயனுர், வாயிலார் நாயனர் கழற்சிங்க நாயனர், செருத்துணை நாயனர் புகழ்த்துணை நாயனர், கோட்புலி நாயனுர், பூசலார் நாயனர், கோச்செங்கட் சோழநாயனுர்.

சிவனடியாரை வழிபட்டு முத்திபெற்றவர் பத்தொன் பதின்மர் : திருநீலகண்டர், இயற்பகையார், இளையான் குடிமாறர், மெய்ப்பொருள் நாயனர், விறன்மிண்ட நாயனர், அமர்நீதி நாயனுர், ஏளுதிநாத நாயனர் மானக்கஞ்சாற நாயனுர், திருக்குறிப்புத் தொண்டர், காரைக்காலம்மை யார், மூர்க்க நாயனர், சிறுத்தொண்ட நாயனுர், புகழ்ச் சோழ நாயனுர், நரசிங்க முனையரையர், கலிக்கம்ப நாயனர் சத்தி நாயனர் முனையடுவார் நாயனர், இடங்கழி நாயனர், நேசநாயனுர்.

தொகைவகை விரிநூல்களில் முரண்பாடின்மை சோழ மன்னனுக்கு அமைச்சராகிய சேக்கிழாரடிகள் உலகியலறிவும் நூலுணர்வும் மதிநுட்பமும் நிரம்பப்பெற்ற அருளாளர். திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர்களைக் குறித்து நாட்டில் வழங்கும் செவிவழிச் செய்திகள், திருமுறைகள், கல்வெட்டுக்கள் என்பவற்றைத் துணையாகக்கொண்டு திருத்தொண்டர் வரலாறுகளைத் தம் நூலில் விரித்துக் கூறியுள்ளார். எனவே திருத்தொண்டர்களைக் குறித்துத் தொகை வகை நூல்களினுல் அறிந்துகொள்ள முடியாத செய்திகளும் விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற் றுள்ளமை காணலாம்.

சுந்தரர் வரலாற்றில் நரசிங்க முனையரையர் நம்பி யாருரரை மைந்தராக ஏற்று வளர்த்த செய்தி, " நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்கமுனையரையன் ஆதரித்தீசனுக்காட் செயுமூ ரணி நாவலு ரென் ருேத நற்றக்க வன்ருெண்டன் ஆரூரன்' எனவரும் சுந்தரர் வாய்மொழியால் அறியப்படும்.