பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1051

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 1035

புராணத்தின் முதலில் உள்ள உலகெலாம் என்னும் இம் மறைமொழி,

  • சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்

மீது தாழ்ந்து வெண் ணிற்ருெளி போற்றி நின்

ருதி யாரரு எாதலின் அஞ் செழுத் தோதி யேறிகுர் உய்ய வுலகெலாம் (பெரிய-சம்பந்தர்-216)

என இந்நூலின் நடுவிலும்,

என்றுமின்பம் பெருகு மியல்பினுல் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவியுலகெலாம் :

என இந்நூலின் முடிவிலும் அமைந்திருத்தலும், தோடுடைய செவியன்' என ஆளுடைய பிள்ளை யாரால் எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை யாகிய திருமுறை, அருண்மொழித் தேவராகிய சேக்கிழா ரடிகளால் உலகெலாம் என நிறைவு செய்யப்பெற்று முதலும் முடிவும் பிசனவவுருவாய்த் திகழ்தலும், தேவாரம் முதலாகத் திருத்தொண்டர் புராணம் ஈருகவுள்ள சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் அருமறைப் பொருளாம் பிரணவ உருவின என்னும் மெய்ம்மையினை இனிது புலப் படுத்தல் காணலாம். ஆசிரியர் சேக்கிழார் தில்லையம் புலவர் அருளால் தோன்றிய உலகெலாம் என்னும் மெய்ம் மொழியினைத் தம் நூலின் முதல் இடை கடையாகிய

மூவிடங்களிலும் எடுத்தாண்டுள்ளார். *

அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம்பல முன் தோன்றிய திருத்தொண்டர் புராணமாகிய இத்திரு முறையில் திருவைந்தெழுத்தின் பெருமையினையும் திரு நீற்றின் சிறப்பினையும் ஆசிரியர் ஆங்காங்கே குறித் துள்ளமை மனங்கொளத் தகுவதாகும்.

இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை பிழைத்தி லோமெனிற் பெருந்துலே நேர் நிற்க, என்று

  • பெரிய புராணத்தில் உலகெலாம் என்ற சொல் பயின்ற இடங்கள் : 1.1, 77, 10:15, 18:36, 25:48, 21:37, 30:51, 34-216, 36-641, 34-859, 35.88, 49-46, 757, 78.40, 7-53, (ஆக 15 இடங்கள்)