பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo

35. சிறப்புலியாண்டார் :

இடமிருந்து வலம் : சீர் கொண்ட புகழ் வள்ளல் ' எனத் திருத்தொண்டத் தொகையிற் சிறப்பிக்கப் பெற்ற சிறப்புலி நாயகுச் சிவனடியார்க்குப் பொருள் வழங்குதலும், சிவனடியார் இருவர் அவர் தரும் பொருளை வலக்கையினை நீட்டி வாங்குதலும். 36. சிறுத்தொண்டன் கதை :

இத்தலைப்பில் அமைந்த சிற்பம் மேற்பக்கத்தில் இரண்டு நிகழ்ச்சிகளையும் அவற்றின் நேரே கீழ்ப்பக்கத்தில் இரண்டு நிகழ்ச்சிகளையும் கொண்டு நான்கு பிரிவுகளாக அமைக்கப்பெற்றுளது. அவற்றுள் வலமிருந்து இடமாக மு கற்கண் கீழும் மேலுமாக அமைந்த 3 ஆகிய இரு பிரிவுகள் மட்டும் 36-ஆம் எண்ணுள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இதன்கண் கீழுள்ள சிற்பத்தில் வல மிருந்து இடம்: திருவெண்காட்டு தங்கையார் தம் மைந்தன் சீராளனுடைய கால்கள் இரண்டினையும் பிடித்துக் கொள்ளச் சிறுத்தொண்டர் சீராளன் தலையினைக் கருவி கொண்டு அரிதலும், திருவெண்காட்டு நங்கையார் கறியமுது அமைத்தலும். இதற்கு தேரே மேலுள்ள சிற்பத்தில் திருவெண்காட்டு நங்கையார், * செய்ய மணியே சீராளா வாராய் , சிவனுரடியார் யாம் ய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்ருர் என்று ஓலமிட்டு அழைக்கப் பரமரருளால் பள்ளியினின்று ஓடி உருவான்போல் வத்த சீராளனை இரு கைகளால் எடுத்துத் தழுவுதலும். இவ் விருகாட்சியினை அடுத்து அமைந்த சிற்பப்பகுதி (36-A) இங்குப் படமாக எடுக்கப்பெறவில்லை. விடுபட் அப்பகுதி யில் கீழுள்ள சிற்பத்தில் சிவனடியார் ஒருவர் அமர்ந்திருத் தலையும் அகர்முன் அன்னமும் கறிகளும் படைக் கப் பெற்றிருத்தலையும், ' நாம் இங்கு உண்பது தும் மைந்தன் வந்த ல் , அவனே நாடி அழையும்' என அவ்வடியார் த9து இடக் கையினைக் காட்டி அறிவித்தலையும். அதன் மேலுள்ள சிற்பத்தில் இறைவன் அம்மையப்பராக விடையின்மீது தோன்றியருள்புரிதலையும் காணலாம்.

37. சேரமான் பெருமாள் கதை :

இதன்கண் வலமிருந்து இடம்: சேரமான் பெருமகன் பட்டத்து யானைமேல் அமர்ந்து தனக்குப்பின் ஏவுல