பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘盖

41. A1, A - புகழ்ச் சோழ நாயகுர்

4 - ல் வலமிருந்து இடம்: சேனைத் தலைவர் நால்வர் நிற்கப் புகழ்ச்சோழர் அமர்ந்திருத்தலும், A1, A-ல் போரில் வெட்டப்பட்ட பகைவர் தலைகள் குவிந்து கிடத்தலும், அத்தலைக் குவியலுள் நெற்றிக் கண்ணும் சடை முடியும் உள்ள தலையொன்றைப் புகழ்ச் சோழர் நின்று காணுதலும் சடைத் தலையைத் தம்முடிமேற் கொண்டு புகழ்ச் சோழர் தீயிற் புகுதலும், அந்நிலையில் இறைவன் அம்மையப்பாக விடைமேல் தோன்றி அருள் புரிதலும் காணலாம்.

42. நரசிங்க முனையரைய காயஞர்

வலமிருந்து இடம் அமைச்சர் ஒருவர் நின்று பொன்களை அள்ளித்தர அப்பொன்களை நரசிங்க முனையரையர் சிவனடியார் அறுவர்க்கு அளித்தல். பொன் பெறும் நிலையில் உள்ள அடியார் திருவுருவங்கள் ஆதும் சைவத்தில் அகச்சமயங்கள் ஆறினையும் மேற்கொண் டொழுகும் அடியார்களேக் குறிக்கும் முறையில் அமைந்தன எனக் கருதுதல் பொருந்தும்.

43. அதிபத்த நாயனர் :

வலமிருந்து இடம்: அதிபத்தர் ஏவலால் வலைஞர் மூவர் கடலில் வலையினை வீசி மீன் பிடித்தலும், அவ் வலையில் அகப்பட்ட கிடைத்தற்கரிய நவமணி క్ష్యfr வாங்கிய அதிபத்தர், இது என்னே யாளுடைய இறைவர்க் குரியதாகும் எனக் கடலில் விடுதலும், அந்நிலையில் மாதொரு பாகராக விடைமீது எழுந்தருளிய இறைவனைக் கண்டு அதிபத்தர் தலைமேற் கைகுவித்து வணங்கி நிற்றலும் ஆகிய காட்சிகள் இச் சிற்பத்தில் இடம்

பெற்றுள்ளமை காணலாம்.

44, 44 A. கலிக்கம்பாண்டார் கதை :

44 - ஆம் படத்தில் வலமிருந்து இடம் : சிவனடியார் மூவர் அமர்ந்திருத்தலும், கலிக்கம்பர் மனைவியார் திருவமு தமைத்து அடியார் திருவடிகளை விளக்கக் கசக நீரளித் தலும், 44-A ல் கலிக்கம்பர் அடியார் ஒருவரை ஆசனத்