பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் ičğ

பகுதிகளும் திருக்கோவையாரும் மதுரையிலிருந்து புறப் பட்டு உத்தரகோசமங்கை முதலிய தலங்களை வணங்கிச் செல்லும் வழியிலும் தில்லைப்பதியிலும் பாடப்பெற்றன எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பி குறிப்பிட்டுள்ளார். எனவே திருவாசகப் பதிகங்களுள் முதன்முதற் பாடப்பெற்றது சென்னிப்பத்து என்பது அவர் கருத்தாதல் நன்கு பெறப் படும்.

இனி, திருவாதவூரடிகள் முதன்முதற் பாடிய பனுவல் சிவபுராணம் என்பது கடவுள் மாமுனிவர் கருத்தாகும். திருவாதவூரடிகள் திருப்பெருந்துறையில் இருந்த காலத்து, சிவபுராணம், அற்புதப்பத்து, அதிசயப்பத்து, குழைத்த பத்து, சென்னிப்பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, புணர்ச்சிப்பத்து, அருட்பத்து, திருவார்த்தை, எண்ணப்பத்து. திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்தமாலை, உயி ருண்ணிப்பத்து, பிரார்த்தனைப்பத்து, திருப்பாண்டி விருத்தம் திருச்சதகம் ஆகிய பனுவல்களை முறையே பாடியருளிஞர் எனவும், பின்னர்த் திருவுத்தரகோசமங்கையில் நீத்தல் விண்ணப்பத்தையும், திருவாரூரில் திருப்புலம்பலையும், திருப் புகலியில் பிடித்தபத்தினையும், திருவண்ணுமலையில் திருவெம் பாவை திருவம்மானை என்பவற்றையும், திருக்கழுக்குன்றில் திருக்கழுக்குன்றப் பதிகத்தையும் அருளிச் செய்தாரெனவும், தில்லையில் கண்டபத்து, குலாப்பத்து, கோயில் மூத்த திருப் பதிகம், கோயிற்றிருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திரு வண்டப்பகுதி, போற்றித்திருவகவல், திருப்பொற்கண்ணம், திருத்தெள்ளேனம், திருவுந்தியார், திருத்தோளுேக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னுாசல், அன்னைப்பத்து, திருக் கோத்தும்பி, குயிற்பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து, திருச்சாழல், திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து, திருச்சிற்றம்பலக்கோவை ஆகிய பனுவல்களை முறையே பாடியருளினர் எனவும் கடவுள் மாமுனிவர் கூறுவர். இங்ங்ணம் கடவுள் மாமுனிவர் குறித்த திருவாசகப் பதிகத் தலைப்புகளில் பண்டாய நான் மறை என்ற பகுதி விடுபட்டமைக்குரிய காரணம் விளங்க

இனி, சிவபுராணம் முதலாக அச்சோப்பதிகம் ஈருக இப்பொழுது வழங்கும் திருவாசகப் பதிகங்களின் முறை