பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 蠶

வடிகளைப் போற்றி வழிபடுதலே எல்லா அறங்களுக்கும் மூலமான நல்லறமாகும் என்பது சான்ருேர் துணியாகும். அறத்தின் அடிப்படைக் கொள்கையாகிய இவ்வுண்மை யினை,

" காண்பவன் சிவனேயாகுல் அவனடிக் கன்பு செய்கை

மாண்புறம், அரன் றன் பாதம் மறந்து செய் அறங்களெல்லாம் வீண்செயல், இறைவன் சொன்ன விதி அறம்,

விருப்பொன்றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே.* எனவரும் செய்யுளில் அருணந்தி சிவனர் திட்பமுற விளக்கி யுள்ளார்.

மேல் எடுத்துக் காட்டிய வண்ணம் முன்னைத் தமிழ்ச் சான்ருேர் பலரும் அறத்தின் இலக்கணங்களாகக் கூறிய கருத்துக்களைத் தொகுத்து நோக்குவோமானுல், உலக மக்கள் அறவாழியந்தனனுகிய கடவுளிடத்து நீங்காத பேரன்புடையதாய் அருளாளனுகிய அவன் திருவடிகளை யிறைஞ்சித் தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்களே உண் மையான நல்லறங்களாம் என்பது நன்கு விளங்கும்.

இறைவன் திருவருளை நிலைக்களஞகக் கொண்டு நிகழும் அறத்தின் சிறப்பிலக்கணத்தினை உலக மக்களுக்கு உணர்த்தத் திருவுளங்கொண்ட மணிவாசகப் பெருமான், இப்போற்றித் திருவகவலால் மன்னிய திருவருள் மலை யெனத் திகழும் சிவபரம் பொருளை மறவாது போற்றி வழி படுமுகமாக வையத்து வாழ்வாங்கு வாழும் நல்லற நெறியை மக்கள் கடைப்பிடித்தொழுகுதல் வேண்டுமெனத் திட்பமுற வலியுறுத்தியுள்ளார். எனவே திருவாசகத்திலுள்ள போற் றித் திருவகவலாகிய இது, திருக்குறளில் அறன் வலியுறுத் தல் என்ற அதிகாரத்துடன் தொடர்புடையதென்பது இனிது புலம்ை.

இதுகாறும் கூறியவாற்ருல் திருவாசகத்தில் முதற் கண் அமைந்த சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் ஆகிய நான்கு திருப்பாடல்களும், திருக்குறளின் தொடக்கத்தே அமைந்த கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கதிகாரங்களைப் போன்று, திரு

  • சிவஞான சித்தியார் - இரண்டாஞ் சூத்திரம் 27-ம் செய்யுள்.