பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பன்னிரு திருமுறை வரலாறு


வர் பிற்காலத்தார். திருவெம்பாவைக்குச் சத்தியை வியந் தது' என முன்னேர் கருத்துரை கூறுவர். சத்திகளாவார் அம்பிகை, கணும்பிகை, கெளரி கங்கை, உமை, பராசத்தி, ஆதி சத்தி, ஞான சத்தி, கிரியாசத்தி என ஒன்பதின்மரென வும், மளுேன்மணி, சர்வபூததமனி, பலப்பிரமதனி, பலவி கர்ணி, கலவிகர்ணி, காளி, ரெளத்திரி, சேஷ்டை, வாமை என ஒன்பதின்மரெனவும் வெவ்வேறு பெயரிட்டு வழங்குவர். உலகத் தோற்றத்திற்குக் காரணராகிய சத்திகள் ஒன்பதின் மரும் படைப்பு முதலிய தொழில்களே நிகழ்த்தல் கருதி ஒரு வரை யொருவர் தூண்டிக் கிளர்ந்தெழச் செய்து தொழிற் படும் இயல்பினை உணர்த்துவது இத்திருவெம்பாவை என்றும், இதன் முதலிலுள்ள எட்டுத் திருப்பாடல்களும் மகளிர் ஒருவரையொருவர் துயிலெழுப்பும் நிலையில் அமைந் திருத்தலால் அங்ங்ணம் எழுப்பப்பெற்ற மகளிர் எண்மரும் அவர்களை முதன் முதல் எழுப்பத் தொடங்கியவள் ஒருத்தி யும் ஆக ஒன்பதின்மர் தம்முள் உரையாடும் முறையில் அமைந்தது இப்பனுவல் என்றும், நவசத்திகளின் ஆற்றல் தொழிற்படும் இயல்பினைச் சுட்டிய இத்திருவெம்பாவை ஐந்தொழிற் றிருக்கூத்தியற்றும் அம்பலவாணர்க்குரிய மார் கழித் திருவாதிரைத் திருவிழாவிற் பத்து நாட்களிலும் தில்லைக் கூத்தன் திருமுன்னர் முறையே ஓதி வழிபடப் பெறும் சிறப்புடைத் தாயிற்றென்றும் கூறுவது மரபு.

மக்களுக்குரிய ஓராண்டு வாளுேர்க்கு ஒரு நாள். ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு திங்களும் இரவு தை முதல் ஆனி முடிய ஆறு திங்களும் பகல். இவ்வகையில் மார்கழித் திங்கள் வாளுேர்க்குரிய வைகறைப் பொழுதாகக் கருதப்பெறுகிறது. கூத்தப்பெருமான் திருவுருவில் திகழும் திருவாதிரையானது, நிறைமதியுடன் கூடி விளங்கும் சிறப் புடைய திருநாளாக அமைவது மார்கழித்திங்களில் ஆதலின், மார்கழித் திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்குரிய திருநாளாகக் கொண்டாடப்பெற்று வருகிறது. இத்திரு விழாவின் சிறப்பினை,

" கனைக்கும் அதிர் குரல் கார்வானம் நீங்கப்

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து

  • இப்பா கூன் பெற்று வந்த எட்டடிப் பஃருெடை வெண்பா எனச் சீகாழித் தாண்டவராயர் உரையிற் காணப்படுங் குறிப்பு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. -