பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 143

ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறு நிறை யாதிரை விரி நூ லந்தணர் விழவு தொடங்கப் புரிநூ லந்தணர் பொலங்கலம் ஏற்ப வெம்பா தாக வியனில வரைப்பென அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப் பருமன லருவியின் ஊதை பூர்தர வுறை சிறை வேதியர் நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற் றையல் மகளிர் ஈரணி புலர்த்தர வையை நினக்கு மடைவாய்த்தன்று ”

(பரிபாடல் 11. 74 - 87) என ஆசிரியர் நல்லந்துவளுர் குறித்துள்ளார். t மேகம் பெய்யும் பருவத்தில் மழை பெய்து முடித்தமை யால் தனது கடுங்குரல் நீங்கப் பணி மிகுதலால் குளிரால் நடுங்குதலையுடைய முன்பணிப் பருவம் வந்து எய்தியது. வெயில் கடுமையாகப் பரவாத மழையின் கடைப் பகுதி யாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுவதும் நிறைந்து மறுவுடன் விளங்கும் உவா நாளாகிய திருவாதிரைத் திரு நாளின்கண் விரிநூலாகிய ஆகமங்களைக் கற்றுவல்ல அந்த ணர்கள் திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்குத் திருவிழாவைத் தொடங்கிச் செய்தனர். அவ்விழாவில் முப் புரி நூலணிந்த வேதியர்கள் மக்கள் தானமாகத் தரும் பொருளை யேற்று மகிழ்ந்தனர். வளையலை யணிந்த கன்னிப் பெண்கள், இவ்வுலகம் வெயிலாலும் பணியாலும் வெதும் பாது மழையாற் குளிர்வதாகுக என இறைவதுே &

மகளிர் அறிவுறுத்த நெறியிலே நின்று, பனிபெய்யும் விடி யற் காலத்திலேயே பருமணலேயுடைய வையை யாற்று நீரிலே முழுகி யெழுந்து குளிரும் வாடைக்காற்று வீசுவ தால் வையைக் கரைக்கண் வேதியர் வளர்த்த வேள்வித் தீயைப் பேணிய சிறப்புடனே தமது ஈர அணியையும் புலர, வைத்தனர். மையோலை பிடித்துக் கல்வி பயிலும் இளஞ் சிருர்களுக்குப் போட்டியாக விடியற் காலையிலெழுந்து தாம் கற்ற கல்வியின் வழியொழுகும் நோன் பாகிய இவ்விளையாட் டிற் கலந்து கொண்ட கன்னிப் பெண்கள், தம் தாயின் கத்தே நின்று தமக்குரிய தவமாகிய தைந் நீராடலைச் தனர். இங்ங்னம் கடைச் சங்க காலத்தில் மதுரைமா