பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

பன்னிரு திருமுறை வரலாறு


என்னும் பழைய வரலாறுகளாகிய இறைவனுடைய வெற்றிச் செயல்கள் விரித்துரைக்கப் பெற்றன.

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினன்கினும் முதற்கண் ணதாய்த் திருவியலூர் உய்யவந்த தேவநாயனரால் அருளிச் செய்யப்பெற்ற திருவுந்தியார் என்னும் மெய்ந்நூல், திருவாதவூரடிகள் அருளிய திருவுந்தியார் என்னும் இப் பனுவலே யாப்பினும் ஞானவெற்றியென்னும் பொருளினும் அடியொற்றி அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

ல்டு. திருத்தோணுேக்கம்

தோள் நோக்கம் என்பது, மகிழ்ச்சிப் பெருக்கினுல் தம் தோள்கள் பூரித்து மேலோங்க அவற்றை நோக்கிக் கைவீசி யாடும் மகளிரது விளையாட்டு. இதனை நல்லார் தம் தோள் வீச்சு எனக் குறிப்பிடுவர் அடியார்க்கு நல்லார். போற்று மடியாருள் நின்று நகுவேன் பண்டு தோள் நோக்கி (திருச் சதகம் - 60) எனத் திருவாதவூரடிகள் அடியார் நடுவே நின் றமையால் தமக்குண்டான மகிழ்ச்சிப் பெருக்கைக் குறிப்பிடு தலாலும், குளிர்ந்து தோள் நோக்கிஞர் (சீவக - 1843) எனவும், தாமின்னும் நின் ருராந் தோளுேக்கி (கம்பயுத்த மாயா சனக 82) எனவும் பிறரும் கூறுதலானும் தோணுேக்கம் என்பது, மகிழ்ச்சிப் பெருக்கிளுல் பூரித்த தோள்களை நோக்கியாடுதல் என்பது உய்த்துணரப்படும். திருத்தோளுக்கம் என்னும் இப்பனுவலுக்குப் பிரபஞ்ச சுத்தி எனக் கருத்துரைப்பர் முன்னுேர், ஆன்மாக்களேச் சுத்திகரித்தல் என்பது இதன் பொருள்.

இதன்கண், தில்லையில் திருக்கூத்தியற்றியருளும் இறைவனது இயல்பும், அம்முதல்வன் அயனும் மாலும் தேடிக் காணுதற்கு அரியகுதலும், அன்புருவாகிய கண் னப்பர் என்னும் அடியார்க்கு வெளிப்பட்டருளியதும், சொற் பதங்கடந்த கடவுள் கற்போலும் நெஞ்சைக் கணிவித்து நெஞ்சுட் புகுந்து சொல்லாற் போற்றப்பெறும் நிலையில் எளிவந்தருளிய செய்தியும், நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு, திங்கள், ஞாயிறு, ஆன்மா என இறைவன் எண் பேருருவினய்ை நின்ற நிலையும், அடியார்களின் சித்தஞ் சிவமாக்கிய சீர்த்தியும், தாதையைத் தாளற வீசிய சண் -டசப் பிள்ளையார்க்கு அருள்புரிந்த தகவும், இறைவன் திரு வடிகளையே சிந்திக்கும் இயல்பினராகிய மெய்யடியாரது