பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 169

பெருமையுடையன என்பதும், பெருந்துறையிறைவன் ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப் பேரருளின்பமளித்த பெற்றியும், அப்பெரியோன் ஞாலம் விளங்கத் திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளிய சிறப் பும், வள்ளலாகிய அவ்விறைவன் வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்டு ஊன் பழித்து உள்ளம் புகுந்து உணர்வதுவாய்க் கலந்த திறமும், மூவரறியா முதல்வன் அந்தரத்தே நின்றும் இறங்கி வந்து அடியவர் களது ஆசையையறுத்த அருளின் சிறப்பும், கோகழிநாதன் நற்பரிமேல் வந்த பொற்பும், வள்ளன்மையும், மெய்ம்மையும், அன்பர்களது அகத்தாமரையில் எழுந்தருளிய இறைவன் உலகவர் கண்காண ஆசாளுக எழுந்தருளி வந்து அழகிய சேவடி காட்டிப் பாசம் அறுத்துப் பணிகொண்டருளிய திறமும் ஆகிய திருவருள் நலங்களை அடிகள் இக்குயிற் பத்தில் நெஞ்சம் நெக்குருகிப் போற்றியுள்ளார்.

ல்கூ. திருத் தசாங்கம் ஆட்சி புரியும் தலைவன் ஒருவனுக்குச் சிறப்பாகச் சொல் லத்தக்க பத்து அங்கங்களையும் எடுத்துரைத்துப் போற்றும் பனுவல் தசாங்கம் எனப் பெயர் பெறும். தன்னே ரில்லாத் தலைவனுகிய சிவபெருமான்பாற் காதல் கொண்ட பெண் ஒருத்தி, கிளியை நோக்கிச் சிவபெருமானுக்குரிய பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்பன யாவை என வினவக்கேட்ட கிளியானது முறையே அவ் அங்கங்கள் இவை என விடை கூறும் முறையில் வினு வும் விடையுமாக அமைந்த பத்து நேரிசை வெண்பாக்களை யுடையது இத்திருப்பதிகமாகும். தலைவி யொருத்தி கிள்ளையை நோக்கி விஞ நிகழ்த்த, அவ்விளுவுக்குக் கிளி விடைகூறும்முறையில் இத்திருப்பதிகம் அமைந்திருத்தலால் இதனைக் கிள்ளேப்பத்து என வழங்குதலும் பொருந்தும். எனினும் இத்திருப்பதிகத்தில் சிவபெருமானுக்குரிய பேர், நாடு, ஊர் முதலிய பத்து அங்கங்களைப் பற்றிய புகழ்ச்சியே சிறப்புடைய பொருளாக அமைந்திருத்தலால் இது திருத் தசாங்கம் என்னும் பெயருடையதாயிற்று.

  • பேர்நாடு ராறு மலை பெயருர்தி படை முரசு

தார் கொடி யெலாம் அரற்குச் சாற்றல் தசாங்கமதாம் ” எனத் திருப்பெருந்துறைப் புராணத்தில் இப்பதிகத்தின் பெயர்க் காரணம் இனிது விளக்கப்பெற்றது.