பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் క్రొ?

கருத்துரை வரைந்து உள்ளனர். அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே ' என அடிகள் இறைவன் திருவருளால் பொய்ந்நெறியாகிய பிறவித் தொடர்ச்சியை விட்டு நீங்கிச் சித்தமலம் அற்றுப் பத்தர் இனத்தராய்ப் பரனுணர்வோடு ஒன்றியுணரும் மெய்த்தவச் செல்வராய் முத்தி நெறியில் திகழும் மாண் பினைப் புலப்படுத்துவனவாக இப்பதிகப் பாடல்கள் அமைந் திருத்தலால், இப்பாடல்கள் சீவன் முத்தரது இயல்பினை விளக்கும் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றன.

கந்தழி யெனப் போற்றப்பெறும் பரம்பொரு ளாகிய இறைவனது இயல்பினை விளக்கக் கருதிய நச்சிஞர்க் கினியர், ' கந்தழியாவது ஒரு பற்றும் அற்று அருவாய்த் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள். அது,

" சார்பிளு ற் ருேன்ருது தானருவா யெப்பொருட்குஞ்

சார்பென நின் றெஞ்ஞான்றும் இன் பந் தகைத் தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர் " என்பதாம். இதனை,

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு

நாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் (திருவாசகம் அதிசயப் பத்து - 9) என அதனை உணர்ந் தோர் கூறியவாற்ருன் உணர்க " (திரு முருகாற்றுப்படை உரை) என இவ் அதிசயப்பத்தின் ஒன்பதாந் திருப்பாடலை எடுத்துக் காட்டியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

உள. புணர்ச்சிப் பத்து

திருப்பெருந்துறையில் குருவாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளிய இறைவனைப் பிரியாது போற்றும் பேரன்பினராகிய திருவாதவூரடிகள், அம்முதல்வன் திருவடி களைப் பூண்டு அப்பெருமானைப் பிரிவின்றி ஒன்றியுடனும் பேரின்ப நிலையினை விரும்பி, என் பொல்லா மணியைப் புணர்ந்து புடைபட்டிருப்பது என்று கொல்லோ என்று நெஞ்சம். நெக்குருகிப் போற்றும் நிலையில் இப்பதிகத்தினை அருளிச் செய்தமையின், இது புணர்ச்சிப்பத்து என்னும் பெயருடையதாயிற்று.