பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

பன்னிரு திருமுறை வரலாறு


மாறும் செய்து நலந்தரும் மென்மொழிகளால் நாடுதலின், இத்திருக்கோவையில் நன்னிலை நாண நடுங்க நாடல்’ என அவ்விரண்டும் இடம்பெறுவனவாயின.

மடற்றிறம் என்பது, நடுங்க நாடுதலாற் பெருநாணின ளாய தலைமகள் தன் குறை சொல்லமாட்டாது நிற்ப, இனி இவள் இறந்து படவுங்கூடும் என எண்ணித் தலைமகனுடன் சொல்லாடத் தொடங்கிய தோழி, தானும் பெருநான முடையளாதலின், மீண்டும் தலைமகள் குறையுற வேண்டி ஒன்றுங் கூருதிருப்ப, அந்நிலைமைக்கண் தலைமகன் சென்று இந்நாள் வரையும் எனது குறை நின்னல் முடியும் என்று நின்னை வந்து இரந்தேன் ; இது நின்னல் முடியாமையின் யான் மடலூர்ந்தாயினும் இக்குறை முடித்துக் கொள்வேன் ’ எனத் தோழிக்குக் கூரு நிற்றல். இது, தலைமகன் ஆற்ரு துரைத்தல் என்பது முதல் தோழி உடம்பட்டு விலக்கல் என்பது ஈருக ஒன்பது துறைகளை யுடையதாகும்.

குறைநயப்புக் கூறல் என்பது, தலைமகனை மடலேருத வாறு விலக்கி அவன் குறையினை முடிப்பதாக ஏற்றுக் கொண்ட தோழி, தலைமகளைக் குறை நயப்பிக்க அவனது குறையினைக் கூறுதல். இது, குறிப்பறிதல் முதல் மனத் தொடு நேர்தல் ஈருக எட்டுத் துறைகளையுடையது.

கேட்படை என்பது, தலைமகளைக் குறைநயக்கும்படி செய்து தன்னிகிைய கூட்டத்தினைக் கூட்டுதற்கு இயைந்த தோழி, தலைமகளது பெருமையும் தனது முயற்சியது அருமையும் தலைமகனுக்குப் புலப்படும்படியும், இத்துணை அருமையுடைய தலைவி இனி நமக்கு எய்து தற்கு அரியள் என்பதனை அவன் உணர்ந்து விரைந்து மணந்து கொள்ளுதல் வேண்டியும் அவனுக்குப் பொருந்த மறுத்துக் கூறி, அவன் தம்மை அணுகி நில்லாதவாறு அப்புறப் படுத்தல். இது, தழைகொண்டுசேறல்முதல் தழை விருப் புரைத்தல் ஈருக இருபத்தாறு துறைகளை யுடையதாகும்.

பகற்குறி என்பது, தலைமகன் தந்த கையுறையாகிய தழையினைத் தலைமகள் ஏற்கும்படி செய்த தோழி, தலைமகனுடன் அவளைப் பகற்குறியிடத்து அளவளாவுமாறு கூட்டுதல். இது, குறியிடங் கூறல்முதல் பதிநோக்கி வருந்தல் ஈருக முப்பத்திரண்டு துறைகளையுடையது.