பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 2器器

வரவுணர்தல் என்பது, தலைமகளும் தோழியும் உள்ள இடத்திற்சென்று தலைமகன் கரந்த மொழியால் தன்கருத் தறிவிக்க, தோழி அவனது நினைவினை ஆராய்ந்தறிதல், ஐயுறுதல், அறிவு நாடல் என்னும் துறையிரண்டும் இதன் பாற்படும்.

முன்னுறவுணர்தல் என்பது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னைத் தலைமகளது வேறுபாடுகண்ட தோழி, இவ்வேறுபாடு தெய்வத்திலைாயிற்ருே அல்லது மற்ருெரு வாருயிற்ருே ' என ஐயுற்று நிற்பது. வாட்டம் விளுதல் என்னும் துறை இதன் பாற்படும்.

குறையுறவுணர்தல் என்பது, தலைமகன் குறையுறத் தோழி அதனைத்துணிந்துணர்தல். இது, குறையுற்று நிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல், இருவர் நினைவும் ஒருவழியறிதல் என்னும் நான்கு துறைகளை யுடையதாகும்.

நாணநாட்டம் என்பது, இருவர் நினைவும் ஐயமறத் துணிந்த தோழி, அவரது கூட்ட முண்மைகாரணமாகத் தலைமகளை அவள் நானும் வண்ணம் ஆராய்தல். இது, பிறைதொழு கென்றல் முதலாக மதியுடம் படுதல் ஈருக ஐந்து துறைகளையுடையது.

நடுங்கநாட்டம் என்பது. தலைமகள் பெருநாணினள் ஆகலானும் தோழியாகியதான் அவளது குற்றேவல் மகள் ஆகலானும் பின்னும்தான் சொல்லாடாது அவள்தன்னைக் கொண்டே கேட்பது காரணமாக நெருங்கிநின்று, ஒருபுலி ஒருவனை எதிர்ப்பட்டது எனக்கூறித் தலைமகளை அவள் அஞ்சி நடுங்குமாறு ஆராய்தல். இது, புலிமிசை வைத் துரைத்தல் என்னும் ஒரு துறையினையுடையது.

" நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி

காணுங் காலைத் தலைமகள் தேஎத்து ' என்பவாகலின் நாணவும் நடுங்கவும் நாடுதல் அகத்தமிழிலக் கணம் அன்றென்பது புலனும். ஆயினும் தலைமகள் தனக் குத் தலைவைேடுண்டாகிய புணர்ச்சி யொழுக்கத்துக்கு இவள் காவற்ருேழி யாகையால் இடையூரும் என்னும் உள்ளத்தளாய் நின்று, இவ்வொழுக்கத்தைத் தோழி அறியின் நன்று என்னும் நினைவு வாரா நிற்க, அந்நிலையிலே தோழி அவளைச் சிறிது நாணமடையுமாறும் நடுக்கமுறு