பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பல்க்கோவை 宠岛$

வேந்தற் குற்றுழிப் பிரிவு என்பது, ஒரு வேந்தனுக்கு ஒரு வேந்தன் தோல்வியுற்றுத் தன் துணையை நாடினுல் அவனுக்கு உதவிசெய்தற்பொருட்டுத் தலைமகன் தலைமகளைப் பிரிந்து போர்த்தொழிலை மேற்கொண்டு செல்லுதல். இது, பிரிந்தமை கூறல் முதலாக மறவாமை கூறல் இறுதியாகப் பதினறு துறைகளையுடையது.

பொருள் வயிற் பிரிதல் என்பது, தம் முன்ளுேர் தேடிய பொருள் கொண்டு இல்லறஞ் செய்தல் அறமன்றென வுணர்ந்த தலைமகன், தான் ஈட்டிய பொருள் கொண்டு இல்லறம் நிகழ்த்தும் கருத்துடையளுய்த் தானே முயன்று பொருள் தேடுதற் பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து செல்லுதல். இது, வாட்டங்கூறல் முதல் உண் மகிழ்ந் துரைத்தல் ஈருக இருபது துறைகளையுடையது.

பரத்தையிற் பிரிவு என்பது, தலைமகன் தலைமகளை மணந்துகொண்டு மனைவாழ்க்கையினை நிகழ்த்தும் நிலையில், வைகலும் பாலே நுகர்வாைெருவன் இடையே புளிங்காடி யும் நுகர்ந்து, பாலின் இனிமையினையறிந்தாற்போல, அவள் நுகர்ச்சியினிமை யறிதற்கும், பண்ணும் பாடலும் முதலா யின காட்டிப் புறப் பெண்டீராய பரத்தையர் தன்னைக் காத லித்தால் தான் எல்லார்க்குந் தலைவனதலின் அவர்க்கும் இன்பஞ் செய்தல் வேண்டியும், தலைமகளை யூடல் அறிவித்தற் கும் தலைமகளைப் பிரிந்து பரத்தையையடைதலாகும் என்பர் பேராசிரியர், இது, கண்டவர் கூறல் முதல், ஊதியம் எடுத் துரைத்து ஊடல் தீர்த்தல் ஈருக நாற்பத்தொன்பது துறை களையுடையதாம்.

இருபத்தைந்து கிளவிக் கொத்துக்களாக மேற்குறித்த கிளவிப் பெயர்கள், இறையனர்களவியலுரையினை அடி யொற்றி இத்திருக்கோவையில் அமைக்கப்பெற்றன எனத் தெரிகிறது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் தாம் கூற எடுத்துக்கொண்ட காமத்துப் பாலாகிய அகனைந்திணை யொழுகலாற்றினை இருபத்தைந்ததிகாரங்களாக வகைப் படுத்துரைத்தாற் போன்று, திருவாதவூரடிகளும் நானூறு துறைகளில் தாம் பாடக் கருதிய திருச்சிற்றம்பலக்கோவை யினை மேற்குறித்தவாறு இருபத்தைந்து கிளவிக் கொத்துக் கிள்ாக வகைபெற அமைத்துள்ளமை ஒப்புநோக்கத்தக்க தாகும். பிற்காலக் கோவைகளிற் பல், கைக்கிளை முதல்