பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 器篮艇

தாகும். இத்திருக்குறளில் வந்த அணங்குகொல் ' என் பதனை யமன் விடுத்த துதோ, அனங்கன் துணையோ எனவும், வாழ்பதி, போதோ, விசும்போ, புனலோ, பணி களது பதியோ' எனவும் வரும் தொடர்களாலும், ஆய் மயில் கொல்லோ, கனங்குழை மாதர் கொல் என்பதனை தில்லைமாதோ மடமயிலோ என நின்றவர் ' என்ற தொட ராலும் அடிகள் விரித்து விளக்கியுள்ளமை நோக்கத் தக்க தாகும்.

அறநூல் விதியால் நம் தலைவர் உலகத்தைக் காத்தற் பொருட்டுப் பிரியக் கருதுகின்ருர் எனத் தலைமகன் நாடு காத்தற்குப் பிரியும் பிரிவினைத் தோழி தலைமகளுக்கு அறிவிப்பதாக அமைந்தது,

மூப்பானிளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் வியன்றில்லையான ருளால் விரிநீருலகங் காப்பான் பிரியக் கருதுகின் ருர் நமர் கார்க்கயற்கட் பூப்பா ன ல மொளிரும் புரி தாழ்குழற் பூங்கொடியே.

(திருக்கோவை. 312) எனவரும் திருப்பாடலாகும். இதன்கண் தலைமகனுக்குரிய நாடு காத்தற் பிரிவு தில்லையானருளால் அளிக்கப்பட்டது என்னும் உண்மையினைத் தில்லையான ருளால் விரிநீருலகங் காப்பான் பிரியக் கருதுகின் ருர் நமச் எனவரும் தொடரின் கண் அடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். தில்லைச் சிற்றம் பலத்தில் ஆடல் புரிந்தருளும் இறைவனது ஏவலால் நம் தலைவர் விரிந்த நீராற் சூழப்பட்ட உலகத்தைக் காத்தற் பொருட்டுப் பிரியக் கருதுகின்ருர் என்பது இத்தொடரின் பொருளாகும். தில்லையான் ஏவலாவது, எல்லா உயிர்களை யும் அரசன் காக்க வேண்டுமென்னும் தரும நூல் விதி. காத்தலாவது, தன் வினை செய்வாரானும் கள்வரானும் பகை வரானும் உயிர்கட்கு வரும் அச்சத்தை நீக்குதல் எனப் பேராசிரியர் இத்தொடர்பொருளை விளக்குவர். இத்தொடர்,

முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் (388) என்னும் திருக்குறட் பொருளை அடியொற்றி அமைந்திருத் தல் அறியத் தக்கதாகும். தான் முறை செய்து, பிறர் நலியா மற் காத்தலையுஞ் செய்யும் அரசன் பிறப்பால் மகனேயாயினும் செயலால் மக்களுக்குக் கடவுள் என்று வேறு பிரித்து மக்களிற் பிரித்து உயர்த்துப் போற்றப் பெறுவான் என்பது