பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

பன்னிரு திருமுறை வரலாறு


திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக்கொள்கை

சைவ சமய குரவர் எனப் போற்றப்பெறும் நால்வருள் கால முறைப்படி நாலாமவராக வைத்து எண்ணப் பெறு பவர் திருவாதவூரடிகளாவர். அடிகள் தமக்கு முன்னுள்ள திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவரும் அம்மூவர்க்கும் காலத்தால் முற். பட்ட திருமூல நாயனரும் கொண்டொழுகிய சைவ சித்தாந்தம் எனப்படும் சிவநெறிக் கொள்கையினையே மேற்கொண்டொழுகியவராவர். இச்செய்தி, திருமந்திர மாலையிலும் தேவாரத்திருப்பதிகங்களிலும் உள்ள தொடர் களும் கருத்துகளும் அடிகள் அருளிய திருவாசகம் திருக் கோவையாகிய அருள் நூல்களில் அவ்வாறே எடுத்தாளப் பட்டிருத்தலால் இனிது விளங்கும்.

திருவாசகத்தில், பதிபசுபாசம் என்னும் முப்பொரு ளுண்மை பேசப்பட்டுள்ளது. பதி - இறைவன். பசு - ஆன்மா பாசம் - உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள். அவற்றுள் மாயை யின் காரியமாகிய மாயேயத்தையும், இறைவனது சத்தி களுள் ஒன்ருகிய திரோதாயியையும் வேறு பிரித்து எண்ணி மலங்கள் ஐந்தெனக் கூறுதலும் உண்டு. இங்ங்னம் மும் மலம், ஐம்மலம் என வழங்கும் சைவ சித்தாந்தக் குறியீடு களும் இருவினையொப்பு முதலிய நுண்பொருள்களும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளமை காணலாம். இக் குறிப்புக்களை உற்று நோக்குங்கால் திருவாதவூரடிகள் திருமூலர் அருளிய சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை களை மேற்கொண்டொழுகிய செம்புலச் செல்வரென்பது நன்கு துணியப்படும்.

இனி, சிவமானவா.பாடி எனவும், சிவமாக்கி எனை யாண்ட எனவும், சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்ரும் திருப்பெருந்துறையுறை சிவனே என வும் திருவாசகத்தில் வரும் தொடர்கள், அடிகள் காலத்துப் பரவிய மாயாவாதக் கொள்கையினை ஒரளவு தழுவியமைந் தன எனக் கருதுவாருமுளர். இக்கருத்து ஒரு சிறிதும்

1. தஞ்சை K. S. ரீநிவாச பிள்ளையவர்கள் எ! ய தமிழ் வரலாறு. (நான்காம் பதிப்பு) - (பக்கம் 138, 189) ழுதிய தமிழ்