பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

용

பன்னிரு திருமுறை வரலாறு

அவற்றின் பாசங்களை யகற்றி அருள்புரிதலாகிய தன் தொழிலை நிகழ்த்துவன். இவ்வாறு உயிர்க்குயிராய் உடனின்று உதவி புரியும் இறைவனது பெருங்கருணைத் திறத்தை யுணர்ந்து தம் செயலெல்லாவற்றையும் கைவிட்டு அப்பெருமான இடைவிடாதெண்ணி அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யாராய் நின்ற திருமாளிகைத்தேவர், உயிர்கட்குக் கருணையான் உபகரித்துவரும் இறைவனது உரிமையை நோக்குந்தோறும் அப்பெருமான்பா லுள்ள பேரன்பு அடங்காது மீதுர்தலின் அப்பேரன்பே தானுக விளங்கித் தோன்றும் பேரானந்தத்தை நுகர்ந்து இன்புறும் நிலையில் ஒளிவளர் விளக்கே யெனத் தொடங் கும் இத்திருவிசைப்பாத் திருப்பதிகத்தை உளங்குளிர்ந்து பாடியுள்ளார். இறைவனது பொருள் சேர் புகழை வாயாரப்பாடிப் போற்றுதற்கும் மனத்தால் நினைத்தற்கும் அப்பெருமானுக்குத் தொண்டுபட்டு அப்பெருமானை வணங்குதற்கும் அவைேடு பிரிவின்றி யொன்றி யின்புறு தற்கும் அப்பெருமானது காட்டும் உபகாரமேயன்றி அம் முதல்வன் உயிரோடு ஒற்றித்து நின்று கானும் உபகாரமும் இன்றியமையாததாகும் என்னும் இவ் வுண்மையை ஒளிவளர் விளக்கே யென்று தொடங்கும் இத்திருவிசைப்பாத் திருப்பதிகம் இனிது விளக்கு கின்றது. ' உயிர் ஒன்றனையறிதல் முதல்வன் உடனின்றறிதலை யின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாது என்பது தொண்டனேன் நினையுமா நினையே, விரும்புமா விரும்பே, தொடருமாதொடரே, துகருமா நுகரே என்றிவ்வாறு முத்திநிலை பற்றி யோதிய திருவாக்குக்களானுமறிக " (சூத்-11) என மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான போதக் சிற்றுரையில் இத்திருவிசைப்பாத் தொடர்களை முத்தி நிலைபற்றி யோதிய திருவாக்குக்கள் என்று குறித்துள்ளமை உணர்ந்து இன்புறத்தக்கதாகும்.

உயர் கொடி யாடை என்ற திருப்பதிகம் தில்லைச் சிற்றம்பலவரது திருவடிமுதல் திருமுடிவரை அமைந்த திருக்கோலத்தின் பேரழகில் ஈடுபட்டுத் திளைத்து இன்புறுந்திறத்தை விளக்குவது. இதன்கண் தில்லைப் பதியின் வளமும் தில்லைவாழந்தணர்களது சிவபத்தி மாண்பும் விளக்கப்பெற்றுள்ளன.