பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 359

உறவாகிய யோகம் ' என்ற மூன்ருந் திருப்பதிகம் தில்லையம்பலக்கூத்தன் மகேந்திர மலையில் எழுந்தருளிய திறத்தையும் அப்பெருமான் வேடுருவாகி விசயனுக்கருள் புரிந்த அருமையிலெளிய அழகினையும் நினைந்து இறைவன் பாற் காதல் கொண்டு வருந்தும் தலைவியின் மொழிகளை நற்ருய் எடுத்துரைப்பதாகப் பாடப்பெற்றது. எல்லா வுயிர்க்கும் உயிராகி உள்நின்று உறவாடி மகிழ்ச்சி விளைத்தலையே பயனுகக்கொண்டு நிகழும் இறைவனது திருக்கூத்துக்குத் தில்லைச் சிற்றம்பலம் நிலைக்களளுகத் திகழ்தல் கருதி அதனைக் குலாத்தில்லையம்பலம் எனத் திருமாளிகைத்தேவர் இத்திருப்பதிகத்திற் சிறப்பித்துப் போற்றியுள்ளார். திருவாசகத்தில் குலாப்பத்திலுள்ள ஒவ்வொரு பாடலிலும் குலாத்தில்லையாண்டான் எனத் திருவாதவூரடிகள் போற்றிய குறிப்பினையும் அவ்வடிகள் கூறுமாறு வேடுருவாகி மகேந்திரத்து வீற்றிருந்து அருள் செய்த இறைவனது அருட்பண்பினையும் இத்திருப் பதிகத்தில் திருமாளிகைத்தேவர் விளக்கியுள்ளமை ஒப்பு நோக்கி மகிழத்தக்கதாகும்.

இணங்கிலாவீசன் என்ற முதற்குறிப்புடைய நான்காந் திருப்பதிகத்தில் சிவநெறியையும் சிவனடியார் களையும் இகழ்ந்துரைக்கும் பேய்மக்களைத் தம் கண்கள் காணு வென்றும் வாய் அவரோடு உரையாடாதென்றும் திருமாளிகைத்தேவர் வற்புறுத்துக் கூறியுள்ளார்.

மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - அறப்பித்துப் பத்தரினத்தாய்ப் பரனுணர்வி குலுனரும் மெய்த்தவரை மேவா வினை (சிவஞானபோதம். வெ. 75) என மெய்கண்டதேவர் அறிவுறுத்தருளிய சிவபத்தர் இலக்கணம் திருமாளிகைத்தேவர்.பால் முழுதும் அமைந் துள்ளமை அவர் பாடிய இத்திருவிசைப்பாத் திருப்பதிகத் தால் இனிது புலனுதல் காணலாம்.

சோதியே சுடரே சூழொளி விளக்கே ’ எனத் திருவாதவூரடிகள் இறைவனைப் போற்றினுற் போன்று ஒளிவளர் விளக்கே எனத் திருமாளிகைத் தேவர் உளங்கசிந்து போற்றுகின்ருர். சிறந்தடியா ருள்ளத்துத் தேனுாறி நின்று என்ற திருவாசகத்தொடர்ப் பொருள், சித்தத்துள் தித்திக்குந் தேனே' எனத்