பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

பன்னிரு திருமுறை வரலாறு


திருவிசைப்பாவில் எடுத்தாளப்பட்டது. தன்னைத்தந்த என்னுரமுதை என்பது திருவாசகம். அற்பனென்னுள்ளத் தளவிலாவுன்னைத் தந்த பொன்னம்பலத்தாடி என்ற திருவிசைப்பாத் தொடர் அதற்குரிய விளக்கமாகும். தாளுெருவனுமே பலவாகி நின்றவா என வாதவூரர் இறைவனியல்பினை விளக்கினுற் போன்று ஒருமையிற் பலபுக்கு உருவி நின்ருயை எனத் திருமாளிகைத் தேவரும் விளக்கினமை காணலாம். இவ்வாறு திருவாசகத் திற்கும் திருமாளிகைத்தேவர் திருவிசைப்பாவுக்கும் உள்ள தொடர்பினை யுற்று நோக்குங்கால் திருமாளிகைத்தேவர் திருவாசகத்தில் தோய்ந்த உள்ளமுடையாரென்பது நன்கு விளங்கும்.

இவ்வாசிரியர் நீறணிபவளக் குன்றமே என இறை வனது திருக்கோலத்தை நினைந்து போற்றிய குறிப்பு இவர் காலத்து வாழ்ந்த தமிழ் மக்களது உள் ளத்தை நெகிழ்வித்து அவர்களது மனத்தகத்தே இறைவனது திருவுருவினைப் புலப்படுத்தி யின்புறச் செய்தமை நீறணி பவளக் குன்றம்' என அவர்கள் தம் மக்களுக்கு இட்டு வழங்கிய பெயரால் நன்கு புலணுகும்.

சேந்தனுள்

சேந்தன் என்ற பெயருடையார் பலர். திவாகரம் என்ற நிகண்டினைச் செய்வித்த சேந்தன் என்பான், அம்பர் கிழான் அருவந்தை யென்ற சங்ககாலத் தலைவனது வழியில் வந்தவன்; அம்பர் என்ற ஊரினன்; செந்தமிழ் ஆரியம் ஆகிய இருமொழிகளிலும் நிரம்பிய புலமை வாய்ந் தவன்; புலவர் பெருமக்களை ஆதரித்தவன்; சிவபெருமானது இடப் பாகங்கொண்ட அம்மைக்குச் செந்தமிழ் மாலை யந்தாதி புனைந்தவன் எனத் திவாகர நூலாசிரியர் கூறி யுள்ளார். வீரசோழிய உரை மேற்கோட் செய்யுட்களிற் பாராட்டப் பெற்ற பொன்பற்றி காவலன் சேந்தனென் பான், புலவர்களை ஆதரித்த குறுநில மன்னன்; புத்த சமயத்தைப் போற்றியவன் எனத் தெரிகிறது. இங்குக் கூறப்பட்ட இவ்விருவரும் திருவிசைப்பா ஆசிரியராகிய சேந்தளுரின் வேருவரெனத் தெளிதல்வேண்டும். இனி

1. தெ. இ. கல்வெட்டுத்தொகுதி எண் 1, கல்வெட்டு 6ே.