பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை {|

சேந்தனரைக் குறித்துப் பின்வரும் கதையொன்று செவி வாயிலாக வழங்கப் பெற்று வருகின்றது.

சேந்தனர், பட்டினத்தடிகளுக்குக் கணக்கராக இருந்து அடிகள் கட்டளையிட்டவாறு நிதியறையைத் திறந்துவிட்டு அங்குள்ள செல்வ முழுவதையும் ஊரார் கொள்ளை கொள்ளச் செய்தார். இச் செய்தியைக் கேட்ட அரசன், இழந்த பொருள்களுக்குக் கணக்குக் காட்டுதல்வேண்டு மெனக் கூறிச் சேந்தனுரைச் சிறையிலிட்டனன். அதனுல் வருத்தமுற்ற அவருடைய மனைவி மக்கள் பட்டினத்தடி களைப் பணிந்து குறையிரந்து நின்றனர். அப்பொழுது, பட்டினத்தடிகள்,

" மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னிஞனும்

நித்தமுந் தேடிக்காணு நிமலனே யமலமூர்த்தி

செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனே வேந்தனிட்ட

கைத்தளை நீக்கியென்முன் காட்டுவெண் காட்டுளானே என்ற பாடலைப் பாடினர். அந்நிலையில் சிவபெருமானது கட்டளைப்படி விநாயகர் சேந்தனரது விலங்கை முரித்துச் சிறைமீட்டருளினர். சிறையிலிருந்து மீண்ட சேந்தனர், பட்டினத்தடிகள் பணித்த வண்ணம் மனைவி மக்களுடன் தில்லைக்குச் சென்று விறகு விற்பதால் வரும் ஊதியத்தைக் கொண்டு நாடோறும் சிவனடியாரொருவர்க்கு உண வளிக்குங் கடமை மேற்கொண்டு வாழ்ந்திருந்தனர். பல நாட்கள் தொடர்ந்து மழை பெய்த நிலையில் பசியால் வருந்திய சேந்தனுர், விறகு விற்றுக் கிடைத்த மாவினைத் தம் மனைவி கையிற் கொடுத்துக் களியாக்கச் செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். சிவபெருமானே முதுமைப் பருவமுடைய அடியாராகச் சேந்தனர் வீட்டிற் குச் சென்று அவர் அன்பினுலளித்த களி யுணவையுண்டு மகிழ்ந்து அடுத்த வேளைக்கும் வேண்டுமென்பாராய் எஞ் சிய களியையும் பழங் கந்தையில் முடிந்துகொண்டு பொன்னம்பலத்தை யடைந்தனர். இஃது இவ்வாருகத் தில்லையிற் கூத்தப்பெருமானுக்குத் தான் நடத்தும் நாள் வழிபாட்டில் திருச் சிலம்பொலி கேட்டு மகிழ்தலை நியதி யாகக் கொண்ட சோழ மன்னன், அன்றிரவு முழுதுங் காத் திருந்தும் அவ்வொலியைக் கேட்கப் பெருது வருந்தித் துயில் கொண்டான். கூத்தப் பெருமான் மன்னனது கனவில் தோன்றி "வேந்தனே கவலைகொள்ளற்க, இன்று