பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

பன்னிரு திருமுறை வரலாறு


கி. பி. 985 முதல் 1014 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தன் முதலாம் இராசராச சோழனுவன். இவ்வேந்தர் பெருமான் தஞ்சை நகரத்தில் தக்கிணமேரு வென்னும் பெயருடன் இராசராசேச்சரத் திருக்கோயிலைக் கட்டினன். இவ்வேந்தனுடைய அரும்பெறற் புதல்வ ளுகத் தோன்றிக் கங்கை யாறு பாயும் வடநாட்டு மன்ன ரைத் தன்னடிப் படுத்திக் கடல் கடந்து கடாரம் முதலிய வெளிநாடுகளையும் வென்று மேம்பட்ட கங்கைகொண்ட சோழனென்பான், தான் தன் பெயராற் புதுவதாக அமைத்த கங்கைகொண்டசோழபுரத்தினுள்ளே கங்கை கொண்ட சோழேச்சரம் என்ற திருக்கோயிலைக் கட்டின்ை. இவ்வேந்தன் கி. பி. 1012 முதல் 1044-ம் ஆண்டுவரை தமிழகத்தை ஆட்சி புரிந்தான். இவ்விருபெருவேந்தர் களாலும் கட்டப்பெற்ற இரண்டு திருக்கோயில்களையும் நேரிற் கண்டு மகிழ்ந்த கருவூர்த் தேவர் அங்கு எழுந் தருளிய சிவபெருமானைத் திருவிசைப் பாப் பாடிப் பரவிப் போற்றியுள்ளார். எனவே இப்பெரியார் மேற்குறித்த முத லாம் இராச ராச சோழன் முதலாம் இராசேந்திரன் ஆகிய இரு பெருவேந்தர் காலத்தும் இருந்தவரென்பது நன்கு துணியப்படும். எனவே இவ்வாசிரியர் கி. பி. பத்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினுெராம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவரெனக் கொள்ளலாம்.

முதலாம் இராசராச சோழன் தஞ்சையில் இராச ராசேச்சரத் திருக்கோயிலைக்கட்டி முடித்து அக்கோயிலி னுள்ளே பெருவுடையாரைப் பிரதிட்டை செய்யும்பொழுது அஷ்டபந்தன மருந்து இளகிச் சிவலிங்கத் திருவுருவம் மருந்தினுற் பிணிப்புருமையைக் கேள்வியுற்ற கருவூர்த் தேவர், தஞ்சைக்குச் சென்று தமது வாயிற் றம்பலத்தால் அஷ்டபந்தன மருந்தினை இறுகும்படி செய்து பெருவுடை யாரை நிலைபெற நிறுத்தினர் எனச் செவிவழிச் செய்தி யொன்று வழங்கி வருகின்றது. தஞ்சை இராசராசேச்சரத் திருக்கோயிலின் திருப்பணி இராசராச சோழனது பத் தொன்பதாம் ஆட்சியாண்டில் தொடங்கப்பெற்று அவனது ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் நிறைவேறிக் குட முழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நிகழ்ந்த காலமாகிய கி. பி. 1010-ஆம் ஆண்டு தொடங்கிக் கங்கைகொண்ட சோழன் ஆட்சிக் காலமாகிய கி. பி. 104-ம் ஆண்டுவரை