பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 38%.

தில் முன்னமே நிலைபெற்ற காதலுக்கும், பளிங்கினிடத்தே தீயைப் புலப்படச் செய்யும் ஞாயிறு தலைவியினுள்ளத்திற் காதலை வெளிப்படச் செய்யும் இறைவனது திருமுகத் திற்கும் உவமையாய் வந்தவாறு உணர்ந்து மகிழத் தக்க தாகும்.

அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட எனத் தொடங்குந் திருவிசைப்பா, கங்கைகொண்ட சோழேச் சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை உளமுருகிப் போற்றியதாகும். கங்கைகொண்ட சோழேச்சரத்துள் வீற்றிருக்கும் பெருமானை அன்போடு திருவைந்தெழுத்தா கிய சொல்லினிடத்துவைத்து ஓதி உள்ளம் இனிமையால் தேக்கெறியப்பெறும் அடியார்களுக்கு எண் திசையின்கண் உள்ள பொன் முதலிய பொருளும் அவைபற்றிய பல்வேறு பதவிகளின் தொகுதியும் பசும்பொன்னுல் அணி செய்யப் பெற்ற மாளிகைகளும், பவளம் போலுஞ் சிவந்தவாயினை யுடைய மகளிராற் பெறும் போக நுகர்ச்சியும், கற்பகச் சோலை சூழ்ந்த வானுலக ஆட்சியும் ஆகிய எல்லாப் பேறு களும் நிரம்பவுண்டாகும். இங்ங்ணம் பிறரால் அரிதின் முயன்று பெறுவதற்குரிய இம்மை மறுமை யின் பங்களைத் தன்னை நினைந்து வாழ்த்திய அளவிலேயே எளிதின் அளித்தருளவல்ல இம் முழுமுதற் பொருளைவிட வியந்து போற்றுதற்குரிய பிறிதொரு தெய்வம் இல்லை யென்றும், மக்கள் கருதி வழிபடும் வேறுவேறு பெயருடைய எல்லாத் தெய்வங்களாகவும் விளங்கியருள் புரியும் இறைவனுவான் கங்கைகொண்ட சோழேச்சரத்தில் எழுந்தருளிய சிவ பெருமானே யென்றும், மிகப்பெரிய அண்டத்தையும் அணு வெனக் கருதுமாறு விரிந்து விளங்கும் பெருமையும் மிகச் சிறிய அணுவையும் அண்டமெனக் கருதுமாறு அதனிற் பன்னூருயிர மடங்கு நுணுகியூடுருவவல்ல துண் மையும் ஒருங்குடையணுய் அடியார்கள் உண்டவூனும் தனக்காம் படி அவர்கள் உள்ளத்திற் பிரிவின்றி விளங்கும் பேரொளிப் பொருளாய்த் திகழுதல் இறைவனது இயல்பென்றும், மகளிர்பாற் செலுத்தும் விருப்பத்தினை நூருயிரம் பங்கு செய்து அவற்றுள் ஒருபங்கு அளவேனும் இறைவன் பால் மக்கள் அன்பு செலுத்துவாராயின் அவர்கள் தன் பால் வைத்த சிறிய அன்புக்கு மகிழ்ந்து மிகப் பெரிய தேவருலகத்தையே அவர்களுக்குரிய அன்பின் பரிசாக