பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38ty பன்னிரு திருமுதை வால்ாது

குறிக்கப்பட்ட வைப்புத்தலமாகும். இது, மண்ணிநாட் ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் (தெ. இ. க. தொகுதி 2. பக்-331) எனக் கல் வெட்டிற் குறிக்கப்பட்டுளது. இவ்வூர் இக்காலத்துத் திருப்பனந்தாளுக்கு அண்மையில் திருலோக்கியென்ற பெயருடன் வழங்குகின்றது. இங்குச் சிவபெருமானுக்கு உரியனவாக இரண்டு திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று திரைலோக்கியமாதேவீச்சுரம்' என்ப தாகும். முதல் இராச ராச சோழன் மனைவியருள் ஒருத்தியாகிய திரைலோக்கிய மாதேவியென்ற அரசியாற் கட்டப்பெற்றமையால் இது திரைலோக்கிய மாதேவிச்சுரம் எனப் பெயரெய்தியது. இங்கெழுந்தருளிய இறைவனைத் திரைலோக்கிய சுந்தரன் என்ற பெயராற் கருவூர்த் தேவர் போற்றியுள்ளார். கோடைத் திரைலோக்கிய சுந்தரம் எனக் குறிக்கப்படுதலால் இக்கோயிலமைந்த இடம் கோட்டூர் என்ற பெயருடையதாய் அது கோடை என மருவியதெனக் கொள்ளலாம். இறைவன் பாற் காதல் கொண்ட தலைவியின் கூற்ருகவும், அவள் பொருட்டு இறைவனைப் பரிந்து வேண்டும் தோழி முதலியோர் கூற்ருகவும் இத்திருப்பதிகம் அமைந்துள்ளது.

சூரியகாந்தமாகிய பளிங்குக் கல்லில் முன்னமே தீயுண்டாயினும் அக்கல் ஞாயிற்ருெளியின் முன் சேர்ந்த நிலையில் அதனுள்ளே மறைந்திருந்த தீ புறத்தே வெளிப் பட்டு விளங்கினுற்போன்று, எங்கள் தலைவியினுள்ளத்தில் இறைவனுகிய நின்னைப் பற்றிய பேரன்பு கருவிலேயே அமைந்திருப்பினும், நீ திருவுலா எழுந்தருளிய இன்று நின் திருமுகத்தைக் கண்ட அளவே அக்காதல் பெருகி வெளிப்பட்டுச் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே' என்றவாறே யாய் இவளுயிர்க்குத் தாங்காச் சுமையாயிற்று எனத் தோழி இறைவனுக்கு அறிவுறுத்தி முறையிடுவதாக அமைந்தது,

அம்பளிங்கு பகலோன் பால் அடைப்பற்ரு யிவள் மனத்தின் முன்பளிந்த காதலுநின் முகந்தோன்ற விளங்கிற்ருல் வம்பளிந்தகனியே யென்மருந்தே நல்வளர்முக்கட் செம்பளிங்கே பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 570 பாடல் ஆகும். இங்குப் பளிங்கு தலைவியின் உள்ளத்திற்கும், அதனகத்து என்றுமுள்ள தீ அவளுள்ளத்