பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரப் பாடற்ருெகை క్షీ$3

பாடல்களும், குருமட வரலாறு கூறும் 101,102-ஆம் பாடல் களும் இந்நூலின் பாடற்ருெகையினையும் பொருட்சிறப் பினையும் இந்நூலை அருளிச் செய்த திருமூலநாயஞரது வழி முறையில் வந்த மாளுக்கர்கள் வழிய க நிலைபெற்ற திரு மடங்களின் அமைப்பினையும் புலப்படுத்தும் முறையில் அமைந்திருத்தலால் இப்பாடல்கள் நான்கும் ஆசிரியர் கூறிய தற்சிறப்புப்பாயிரத்தின் புறத்தேயமைந்த மற்ருெரு பாயிரமாய்ப் பிற்காலச் சான் ருேராற் பாடப்பெற்று இப் பாயிரத்திற் சேர்க்கப்பட்டன எனக் கொள்ளுதல் தகும். இவ்வாறே இந்நூலின் இறுதியில் 8048-ஆம் பாடலாக வுள்ள மூலனுரை செய்த மூவாயிச ந்தமிழ் என்ற பாட லும் வாழ்கவே வாழ்க என்னும் வாழ்த்துப்பாடலும் திருமூலநாயனருடைய மாளுக்கரால் இயற்றப்பெற்றன எனக்கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

மூல னுரை செய்த மூவாயிரந்தமிழ் மூல னுரைசெய்த முந்நூறு மந்திரம் மூல னுரைசெய்த முப்பதுபதேசம் மூல னுரை செய்த மூன்றுமொன் ருமே (3046)

எனவரும் இப்பாடலை ஆதரவாகக் கொண்டு, திருமூலர் மூவாயிரந் தமிழாகிய இத்திருமந்திர மாலையுடன் முந்நூறு மந்திரம், முப்பதுபதேசம் என வேறு இரண்டு நூல்களையும் அருளிச் செய்த ரென்றும், பிற் குறித்த இரண்டு நூல் களும் திருமூலராகிய சிவயோகியார் மூலனுடம்பிற் புகுதற்கு முன் தமக்குரியதாயிருந்த பழைய உடம்பிலிருந்த போதே செய்யப்பட்டன என்றும் கூறுவாரு முளர். அன் னேர் கூறுமாறு இந்நூலாசிரியராகிய திருமூலர் திருமந் திரத்தையன்றி முந்நூறு மந்திாம், முப்பதுபதேசம் ஆகிய வேறு இரு நூல்களையும் செய்திருப்பாராயின் திருமூலரது வரலாற்றினை விரித்துரைத்த சேக்கிழாரடிகள் இச்செய் தியைக் கூரு து விடுதற்கு இடமில்லை. சேக்கிழாரடிகள் குறிப்பிடாத நிலையில் முந்நூறு மந்திரம், முப்பதுபதேசம் எனப்படும் இரு நூல்களும் திருமூலநாயனுசால் அருளிச் செய்யப்பட்ட வேறு நூல்கள் எனத் துணிந்து கூறுதல் பொருந்தாது. ஆகவே மூலனுரை செய்த என்னும் இத் திருப்பாடலிற் குறிக்கப்பெற்ற மூவாயிரந் தமிழ், முந்நூறு மந்திரம், முப்பது பதேசம் என்னும் இம் மூன்றும் திருமந்திர மாலேயாகிய இந்நூலில் அமைந்த மூவகைப்

28